பொதிகை டிவியில் சமஸ்கிருத செய்தி அறிக்கைக்கு எதிராக முறையீடு!

 

பொதிகை டிவியில் சமஸ்கிருத செய்தி அறிக்கைக்கு எதிராக முறையீடு!

சமஸ்கிருத செய்தியை அனைத்து மாநில தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்ப வேண்டும் என்ற மத்திய அரசின் அறிக்கைக்கு எதிராக மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

பொதிகை டிவியில் சமஸ்கிருத செய்தி அறிக்கைக்கு எதிராக முறையீடு!

பொதிகை தொலைக்காட்சி உட்பட அனைத்து மாநில தொலைக்காட்சிகளிலும் தூர்தர்ஷனில் ஒளிபரப்பப்படும் சமஸ்கிருத செய்திகளை தினமும் 15 நிமிடம் ஒளிபரப்ப வேண்டும் என்றும் சனிக்கிழமை தோறும் 15 நிமிடம் சமஸ்கிருத செய்தி தொகுப்புக்கு ஒதுக்க வேண்டும் என்றும் மத்திய அரசு அறிக்கை அனுப்பியிருந்தது. இதற்கு தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பியது. கேட்க ஆளே இல்லாத ஒரு மொழிக்கு ஏன் இந்த முக்கியத்துவம்? என எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன. மேலும், மத்திய அரசின் இந்த சமஸ்கிருத திணிப்பை திரும்பப்பெற வேண்டும் என்றும் வலியுறுத்தின.

பொதிகை டிவியில் சமஸ்கிருத செய்தி அறிக்கைக்கு எதிராக முறையீடு!

இந்த நிலையில், பொதிகை டிவியில் சமஸ்கிருத செய்தியை ஒளிபரப்ப வேண்டும் என்ற அறிக்கைக்கு எதிராக மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கறிஞர் கண்ணன் முறையீடு செய்துள்ளார். தமிழ் மொழி நிகழ்ச்சிக்காக தொடங்கப்பட்ட பொதிகை டிவியில் மற்ற மொழி செய்திகள் இடம் பெற்றதில்லை என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். அதனை கேட்டுக் கொண்ட நீதிபதிகள், வழக்காக தாக்கல் செய்தால் விசாரிக்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.