சபாநாயகர் பதவிக்கு மனு தாக்கல் செய்தார் அப்பாவு!

 

சபாநாயகர் பதவிக்கு மனு தாக்கல் செய்தார் அப்பாவு!

தமிழக முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதவியேற்ற அதே நாளில், 33 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். வெற்றி பெற்ற எம்எல்ஏக்கள் பதவியேற்கவில்லை. எம்எல்ஏக்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பதற்காக தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமனம் செய்யப்பட்டார். அதன் படி, இன்று காலை 10 மணிக்கு மு.க.ஸ்டாலின் தலைமையிலான 16ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் கூடுகிறது.

சபாநாயகர் பதவிக்கு மனு தாக்கல் செய்தார் அப்பாவு!

கூட்டத்தொடரில், எம்எல்ஏக்களுக்கு கு.பிச்சாண்டி பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். இதனிடையே, சபாநாயகராக ராதாபுரம் சட்டமன்றத் தொகுதி அப்பாவுவும் துணை சபாநாயகராக கு.பிச்சாண்டியும் தேர்வு செய்யப்பட உள்ளது உறுதியானது. இவர்கள் இன்று மனு தாக்கல் செய்வார்கள் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன் படி, தற்போது துணை சபாநாயகர் பதவிக்கு கு.பிச்சாண்டியும் சபாநாயகர் பதவிக்கு அப்பாவுவும் மனு தாக்கல் செய்தனர். சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசனிடம் அவர்கள் மனு தாக்கல் செய்யும் போது முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இவர்கள் இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.