கொரோனா தாக்கத்தால் ரூ.226 கோடி நஷ்டத்தை சந்தித்த அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ்…

 

கொரோனா தாக்கத்தால் ரூ.226 கோடி நஷ்டத்தை சந்தித்த அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ்…

2020 ஜூன் காலாண்டில் அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ் ஒட்டு மொத்த அளவில் ரூ.226.24 கோடியை நிகர இழப்பாக சந்தித்துள்ளது.

நாட்டின் பல நகரங்களில் மருத்துவமனைகள் நடத்தி வரும் அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ் என்டர்பிரைஸ் தனது கடந்த ஜூன் காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட்டுள்ளது. 2020 ஜூன் காலாண்டில் அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ் ஒட்டு மொத்த அளவில் ரூ.226.24 கோடியை நிகர இழப்பாக சந்தித்துள்ளது. 2019 ஜூன் காலாண்டில் அந்நிறுவனம் நிகர லாபமாக ரூ.49.15 கோடி ஈட்டியிருந்தது.

கொரோனா தாக்கத்தால் ரூ.226 கோடி நஷ்டத்தை சந்தித்த அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ்…
அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ்

அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ் குழுமத்தின் தலைவர் பிரதாப் சி ரெட்டி கூறுகையில், கோவிட்-19 தொற்றுநோயின் சவாலுக்கு சர்வதேச சுகாதார சேவைகள் எழுச்சியுடன் புதிய நிதி ஆண்டு தொடங்கியது. உலகம் லாக்டவுனில் இருந்ததால் வர்த்தகம் ஸ்தம்பித்தது அதனால் உலக நாடுகள் நிதி எழுச்சிகளை எதிர்கொண்டன. தற்போது லாக்டவுன் தளர்த்தப்பட்டுள்ளதால், லாக்டவுன் காரணமாக நாங்கள் ஆரம்பத்தில் சந்தித்த பின்னடைவுகளை தணிப்போம் என நாங்கள் நம்புகிறோம் என தெரிவித்தார்.

கொரோனா தாக்கத்தால் ரூ.226 கோடி நஷ்டத்தை சந்தித்த அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ்…
அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ்

2020 ஜூன் காலாண்டில் அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ் என்டர்பிரைஸின் செயல்பாட்டு வாயிலான வருவாய் ரூ.2,171.50 கோடியாக குறைந்தது. 2019 ஜூன் காலாண்டில் அந்நிறுவனத்தின் செயல்பாட்டு வாயிலான வருவாய் ரூ.2,571.89 கோடியாக உயர்ந்து இருந்தது. மும்பை பங்குச் சந்தையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று பங்கு வர்த்தகம் முடிவடைந்தபோது அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ் என்டர்பிரைஸ் நிறுவன பங்கின் விலை 4.19 சதவீதம் அதிகரித்து ரூ.2,030.30ல் முடிவுற்றது.