3 மாதத்தில் ரூ.60 கோடி லாபம் ஈட்டிய அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ்

 

3 மாதத்தில் ரூ.60 கோடி லாபம் ஈட்டிய அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ்

அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ் 2020 செப்டம்பர் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.60.3 கோடி ஈட்டியுள்ளது.

நாட்டின் பல நகரங்களில் மருத்துவமனைகள் நடத்தி வரும் அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ் என்டர்பிரைஸ் தனது கடந்த செப்டம்பர் காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட்டுள்ளது. அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ் 2020 செப்டம்பர் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.60.3 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 30 சதவீதம் குறைவாகும்.

3 மாதத்தில் ரூ.60 கோடி லாபம் ஈட்டிய அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ்
அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ்

2019 செப்டம்பர் காலாண்டில் அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.86.2 கோடி ஈட்டியிருந்தது. 2020 ஜூன் காலாண்டில் அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ் ஒட்டு மொத்த அளவில் ரூ.226.24 கோடியை நிகர இழப்பாக சந்தித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

3 மாதத்தில் ரூ.60 கோடி லாபம் ஈட்டிய அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ்
அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ்

2020 செப்டம்பர் காலாண்டில் அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ் என்டர்பிரைசஸின் வருவாய் 3 சதவீதம் குறைந்து ரூ.2,760.7 கோடியாக சரிவடைந்துள்ளது. 2019 செப்டம்பர் காலாண்டில் அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ் வருவாய் ரூ.2,840.7 கோடியாக இருந்தது. கடந்த வெள்ளிக்கிழமையன்று மும்பை பங்குச் சந்தையில் அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ் என்டர்பிரைஸ் நிறுவன பங்கின் விலை 2.22 சதவீதம் உயர்ந்து ரூ.2,349.35ஆக அதிகரித்தது.