எம்பிகளுக்காக கட்டப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்பு: இன்று திறக்கிறார் பிரதமர் மோடி

எம்பிகளுக்காக கட்டப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்பு: இன்று திறக்கிறார் பிரதமர் மோடி

எம்பிகளுக்காக டெல்லியில் புதிதாக கட்டப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்புகளை பிரதமர் மோடி இன்று திறக்கிறார்.

எம்பிகளுக்காக கட்டப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்பு: இன்று திறக்கிறார் பிரதமர் மோடி

இன்று காலை 11 மணிக்கு காணொலியில் நடைபெறும் நிகழ்ச்சியில் சபாநாயகர் ஓம்பிர்லாவும் பங்கேற்கிறார். டெல்லியில் 80 வருடங்கள் பழமையான 8 பங்களாக்கள் புதுப்பிக்கப்பட்டு 76 அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது. டெல்லியில் டாக்டர் பி டி மார்க் என்ற இடத்தில் கட்டப்பட்ட இந்த அடுக்குமாடி குடியிருப்பு மழைநீர் சேகரிப்பு, சூரிய ஒளி எரிசக்தி சேமிப்பு முறைகளை பயன்படுத்தி கட்டப்பட்டுள்ளன.

எம்பிகளுக்காக கட்டப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்பு: இன்று திறக்கிறார் பிரதமர் மோடி

சாம்பல் மற்றும் கட்டுமானக் கழிவிலிருந்து உருவாக்கப்பட்ட செங்கற்கள், எரிசக்தியை சேமிக்கும் சிறப்பு சாளரங்கள், எல்இடி விளக்குகள், எரிசக்தியில் உபயோகிக்ககூடிய குளிர்சாதனப் பெட்டிகள் போன்றவை இந்த குடியிருப்புகளின் சிறப்பம்சமாக உள்ளது. அத்துடன் இந்த குடியிருப்புகளை உருவாக்க ஒதுக்கப்பட்ட நிதியை காட்டிலும் சுமார் 14% குறைவாகவே இதற்கு செலவானதாக சொல்லப்பட்டுள்ளது.