மீண்டும் தலைதூக்கிய நிறவெறி… கூகுளை சுழற்றியடிக்கும் சர்ச்சை.!?

 

மீண்டும் தலைதூக்கிய நிறவெறி… கூகுளை சுழற்றியடிக்கும் சர்ச்சை.!?

கூகுள் நிறுவனம் குறித்து சொல்லவே தேவையில்லை. உலகின் தேவைகளை மாற்றிய நிறுவனம் என்றால் கூகுள்தான். தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை கூகுள் நிறுவனத்துக்கு முன்னர், கூகுள் நிறுவனத்துக்கு பின்னர் என பிரிக்க முடியும். அந்த நிறுவனத்தைச் சுற்றித்தான் தற்போது புதிய சர்ச்சை எழுந்துள்ளது. கூகுள் நிறுவனம் கருப்பின மக்களை புறக்கணிக்கிறது, தரக்குறைவான நடத்துகிறது என சர்ச்சை வெடித்துள்ளது.

கருப்பின விஞ்ஞானியை வெளியேற்றிய கூகுள்!

கூகுள் நிறுவனம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. செயற்கை நுண்ணறிவு செயல்பாடுகளை அடிப்படையாக வைத்து பல புதிய கண்டுபிடிப்புகளை கூகுள் செய்து வருகிறது. அந்த வகையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில், கூகுள் நிறுவனம்தான் முன்னோடி என்று சொல்லலாம். ஓட்டுநர் இல்லாமல் தானாக செல்லும் வாகனம், கூகுள் லென்ஸ் என பல புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், கூகுளின் செயற்கை நுண்ணறிவு பிரிவில் செயல்பட்ட ஒரு கருப்பின விஞ்ஞானி கடந்த வாரம் வெளியேறியது சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

மீண்டும் தலைதூக்கிய நிறவெறி… கூகுளை சுழற்றியடிக்கும் சர்ச்சை.!?

கூகுளின் செயற்கை நுண்ணறிவு பிரிவின் துணைத் தலைவராக இருந்தவர் டிம்னிட் கெப்ரு. கருப்பின பெண் விஞ்ஞானியான அவர், பதவி விலகுவதற்கு முன் கூகுள் நிறுவனம் குறித்து பகிரங்கமாக பல குற்றங்களைச் சுமத்தி இருந்தார். அவர் எழுதிய கடிதத்தில் கூகுள் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு பிரிவில், பாலின பாகுபாடு, மத வேறுபாடு நிகழ்வதாக குற்றம் சாட்டியிருந்தார். குறிப்பாக, பெண்கள், கறுப்பினத்தவர்கள் புறக்கணிக்கப்படுவதாக குற்றம் சுமத்தினார். அவர்களை வேலைக்கு அமர்த்துவது, வேலை தொடர்பான அறிவை பகிர்ந்து கொள்வதிலும் பாலின சமத்துவம் இல்லை என்று குற்றம் சாட்டியிருந்தார்.

ஆராய்ச்சி கட்டுரை திருட்டு!

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் குறித்த அவரது ஆராய்ச்சி கட்டுரையை, அவரது தனிப்பட்ட மெயிலில் இருந்து எடுக்கப்பட்டு, அதை எடிட் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தனது பிரிவு மேலதிகாரிக்கு விளக்கம் கேட்டுள்ளார். இந்த கடிதம் கூகுள் ஊழியர்கள் இடையே கடுமையான சலசலப்பை ஏற்படுத்தியது. அதன்பின்னர் அவர் பதவி விலக கேட்டுக்கொள்ளப்பட்டு, பதவி விலகியுள்ளார்.

மீண்டும் தலைதூக்கிய நிறவெறி… கூகுளை சுழற்றியடிக்கும் சர்ச்சை.!?

இதனால், செயற்கை நுண்ணறிவு பிரிவு பணியாளர்களுக்கு பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக, அவர் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் பெறுவதற்கு முன்னரே பதவி விலகல் கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. அவருக்கு அளிக்கப்பட்ட வசதிகள் அனைத்தையும் உடனடியாக கூகுள் திரும்பப் பெற்றுள்ளது. இந்த நடவடிக்கைகள் ஊழியர்கள் மத்தியில் மிகப்பெரிய கேள்விகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சுமார் 2000 ஊழியர்கள் கையெழுத்திட்ட புகார் கடிதம் நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மன்னிப்பு கோரிய சுந்தர்பிச்சை!

இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட் நிறுவனத்தின் தலைவர் சுந்தர்பிச்சை வருத்தம் தெரிவிக்கும் கடிதம் ஒன்றை ஊழியர்களுக்கு அனுப்பி உள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்தியில், கெப்ரு பதவி விலகல் பொருத்தமானது அல்ல என்றும், கூகுள் நிறுவனத்தில் கருப்பின மக்களுக்கு உரிய அங்கீகாரம் இல்லை என்கிற குற்றச்சாட்டு ஏற்புடையது அல்ல என்றும் தெரிவித்துள்ளார். எனினும் அவரது முடிவு வருத்தம் அளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மீண்டும் தலைதூக்கிய நிறவெறி… கூகுளை சுழற்றியடிக்கும் சர்ச்சை.!?

உங்களுடைய மனகுழப்பம் தேவையற்றது, பணியாளர்கள் கூகுள் நிறுவனத்தில் தரக்குறைவாக நடத்தப்படுகிறார்கள் என்கிற செய்தி இதன் மூலம் பரவலாக கொண்டு செல்லப்பட்டது வருத்தம் அளிக்கிறது என்றும் சுந்தர் பிச்சை தனது வருத்தத்தை வெளியிட்டுள்ளார். கெப்ரு முன்வைத்த குற்றச்சாட்டுகளை, பாகுபாடுகளை சரி செய்ய வேண்டிய பொறுப்பு உள்ளது. உங்களின் மீது நம்பிக்கை உள்ளது. விரைவில் இவற்றை சரி செய்வோம் என எழுதியுள்ளதாக நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. அதே நேரத்தில் கூகுள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப பிரிவின் செயல்பாடுகளை தொடர்ச்சியாக கொண்டு செல்வதற்கு எந்தத் தடையும் இல்லை. கெப்ரு முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளை சரிசெய்து கொள்வோம் என்றும் சுந்தர் பிச்சை குறிப்பிட்டுள்ளார்.

கருப்பின பணியாளர்கள் 2%

மீண்டும் தலைதூக்கிய நிறவெறி… கூகுளை சுழற்றியடிக்கும் சர்ச்சை.!?

சுந்தர்பிச்சையின் இந்த விளக்கத்துக்கு பின்னர், அதை விமர்சனம் செய்துள்ள கெப்ரு வெளியிட்டுள்ள டிவிட்டர் செய்தியில், சுந்தர்பிச்சை உண்மையான அக்கறையோடு வருத்தத்தை தெரிவிக்கவில்லை என விமர்சனம் செய்துள்ளார். கூகுள் நிறுவன பணியாளர்களில் கருப்பினத்தைச் சேர்ந்தவர்கள் 2 சதவீதத்துக்கு குறைவானவர்களே என கெப்ரு குறிப்பிட்டுள்ளார். நுண்ணறிவு தொழில்நுட்பம் அனைவருக்குமானதாக இருக்கும்போது, அதை தயாரிப்பதில் கருப்பர்கள் ஏன் புறக்கணிக்க வேண்டும் எனவும் கெப்ரு கேள்வி எழுப்பி உள்ளார். ஸ்டான்போர்டு பல்கலைக் கழகத்தில் படித்த கெப்ரூ, தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் திரட்டு திரட்டு துறையில் நிபுணராவார். செயற்கை நுண்ணறிவு துறையில் இயங்கும் கருப்பின நிபுணர்களுக்கான அமைப்பினையும் நடத்தி வருகிறார். இதற்கு முன்னர், ஆப்பிள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்களில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் தலைதூக்கிய நிறவெறி… கூகுளை சுழற்றியடிக்கும் சர்ச்சை.!?

இதற்கு முன்னர் கூகுளின் மன்னிப்புகள்!

இந்தச் சூழலில் சுந்தர்பிச்சையின் விளக்கம் – டிம்னிட் கெப்ரு ஆகியோருக்கு இடையேயான சர்ச்சை அமெரிக்க மென்பொருள் துறையில் புதிய பரபரப்பை கூட்டியுள்ளது. இதற்கு முன்னர் 2015 ஆம் ஆண்டில் கூகுள் செயற்கை நுண்ணறிவு புகைப்பட ஆய்வு ஒன்றில், கருப்பின மக்களை கொரில்லாவுடன் கூகுள் ஒப்பிட்டுள்ளது. இது சர்ச்சையாகி பின்னர் கூகுள் மன்னிப்பு கேட்டது. பின்னர் 2016 ஆம் ஆண்டில் கூகுள் நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் அழகு தொடர்பான ஆய்வு ஒன்றில் வெற்றிபெற்றவர்கள் அனைவரும் வெள்ளையர்கள் என தகவல் வெளியானது. இதுவும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. நுண்ணரிவு பிரிபின் வழிமுறைகள் பெரும்பாலும் வெள்ளை மக்களின் புகைப்படங்களுடன் ஒப்பிடுவதால், இப்படி தீர்வு கிடைப்பதாக அப்போது கூகுள் மீது குற்றம்சாட்டப்பட்டது

உலகம் முழுவதும் அனைத்து மக்களுக்கும் தேடும் தகவல்களுக்கு தீர்வு சொல்லும் கூகுள், அந்த தொழில்நுட்பத்தை உருவாக்கும் விஞ்ஞானிகளில் பாரபட்சம் காட்டுவது நியாயமா என்பது மிகப்பெரிய கேள்வியாக எழுந்துள்ளது.