இமாச்சல பிரதேச கிராமத்தில் ஒரு நபரை தவிர்த்து மற்ற அனைவரையும் ஒரே சமயத்தில் தொற்றிய கொரோனா…

 

இமாச்சல பிரதேச கிராமத்தில் ஒரு நபரை தவிர்த்து மற்ற அனைவரையும் ஒரே சமயத்தில் தொற்றிய கொரோனா…

இமாச்சல பிரதேசத்தில் ஒரு கிராமத்தில் ஒரே ஒரு நபரை தவிர மற்ற அனைவருக்கும் கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது.

இமாச்சல பிரதேசத்தில் மக்கள் தொகை விகிதம் அடிப்படையில் கொரோனா வைரஸால் மிகவும் பாதிக்கப்பட்ட மாவட்டம் லாஹால் மாவட்டம். கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நோக்கில் நோஹ்தாங் சுரங்கத்தின் வடக்கு வாசலுக்கு அருகில் உள்ள டெல்லிங் நுல்லாவோடு சுற்றுலா பயணிகளின் வருகை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. லாஹோல் கிராமத்துக்குள் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவதில்லை, ஏனெனில் அது கட்டுப்பாட்டு மண்டலங்களாக நடைபெற்றுள்ளது.

இமாச்சல பிரதேச கிராமத்தில் ஒரு நபரை தவிர்த்து மற்ற அனைவரையும் ஒரே சமயத்தில் தொற்றிய கொரோனா…
இமாச்சல பிரதேச கிராமம்

லாஹோல் மாவட்டத்தில் உள்ள சிறிய கிராமம் தோராங். இந்த கிராமத்தில் மொத்தமே 42 பேர் மட்டுமே வசிக்கின்றனர். ஏனெனில் அந்த கிராமத்தில் வசித்த பெரும்பாலான மக்கள் குளிர்காலத்திற்காக குல்லுக்கு குடிபெயர்ந்தனர்.கடந்த சில தினங்களுக்கு மத வழிபாட்டு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தாங்களாகவே முன்வந்து கொரோனா வைரஸ் பரிசோதனை செய்தனர்.

இமாச்சல பிரதேச கிராமத்தில் ஒரு நபரை தவிர்த்து மற்ற அனைவரையும் ஒரே சமயத்தில் தொற்றிய கொரோனா…
பூஷன் தாகூர்

பரிசோதனை செய்த 42 பேரில் 41 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியானது. ஆனால் பூஷன் தாகூர் என்ற 52 வயதான நபருக்கு மட்டும் கொரோனா வைரஸ் பரிசோதனை முடிவுகள் எதிர்மறையாக வந்தது. பூஷன் தாக்கூரின் குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியானது குறிப்பிடத்தக்கது. பூஷன் தாக்கூர் கூறுகையில், கடந்த 4 தினங்களாக நான் தனி அறையில் இருந்து வருகிறேன், எனக்கு வேண்டிய உணவை நானே சமைத்து கொள்கிறேன். கொரோனா பரிசோதனை முடிவுகள் வரும் வரை எனது குடும்ப உறுப்பினர்களுடன்தான் இருந்தேன். அதேசமயம் மாஸ்க் அணிதல், சானிடைசர் பயன்படுத்துதல் போன்ற கோவிட்-19 விதிமுறைகளை பின்பற்றினேன் என்று தெரிவித்தார்.