அன்வர் ராஜாவின் பகிரங்க குற்றச்சாட்டு – ஓபிஎஸ் பரபரப்பு விளக்கம்

 

அன்வர் ராஜாவின் பகிரங்க குற்றச்சாட்டு – ஓபிஎஸ் பரபரப்பு விளக்கம்

நடந்து முடிந்த தேர்தலில் அதிமுகவின் தோல்வி குறித்து முன்னாள் அதிமுக எம்.பி. அன்வர்ராஜா பேசியது அக்கட்சியினர் இடையே சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அன்வர் ராஜாவின் பகிரங்க குற்றச்சாட்டு – ஓபிஎஸ் பரபரப்பு விளக்கம்

பரமக்குடியில் நடந்த அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அன்வர்ராஜா, கிராமத்தில் உள்ள பொது மக்கள் எல்லோரும் தேர்தல் நேரத்தில் எதிர்பார்ப்பது என்னவென்றால் பிரச்சாரத்தின் போது ஜெயலலிதா, எம்ஜிஆர் பெயரை சொல்கிறார்களா என்று தான் உற்று கவனிப்பார்கள். நீங்கள் அதை சொல்ல மறந்து விட்டால் அவர்கள் உங்களை மறந்து விடுவார்கள் என்றார்.

அன்வர் ராஜாவின் பகிரங்க குற்றச்சாட்டு – ஓபிஎஸ் பரபரப்பு விளக்கம்

புரட்சித்தலைவர் எம்ஜிஆர், ஜெயலலிதா பெயரை சொல்ல மறந்ததால் தான் மக்கள் நடந்து முடிந்த தேர்தலில் அதிமுகவை மறந்து விட்டனர் என்று குற்றம் சாட்டிய அன்வர்ராஜா, ஜெயலலிதா சிறைக்கு சென்றபோது 200 பேர் தற்கொலை செய்து கொண்டார்கள். உயிருடன் இருந்திருந்தால் 70 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று முதலமைச்சர் பதவியை இழந்திருந்தால் 300க்கும் மேற்பட்ட கட்சியினர் தற்கொலை செய்து கொண்டிருப்பார்கள். ஆனால் இந்த தேர்தலில் தோல்வியுற்று ஆட்சிக்கு வரமுடியவில்லை அதிமுக. ஆனாலும் இது குறித்து யாரும் வருத்தப்படவும் இல்லை. தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ளவும் இல்லை என்று பேசி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

அன்வர் ராஜாவின் பகிரங்க குற்றச்சாட்டு – ஓபிஎஸ் பரபரப்பு விளக்கம்

அன்வர் ராஜாவின் இந்த பேச்சு அதிமுகவினரிடையே மிகுந்த சலசலப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் இதற்கு விளக்கம் அளித்திருக்கிறார்.

தேர்தலில் எம்ஜிஆர் ஜெயலலிதாவை முன்னிறுத்த வில்லை என்ற அன்வர்ராஜாவின் கருத்துக்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். அன்வர் ராஜா சொன்னது தவறு என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.