அ.தி.மு.க கூட்டணியை விரும்பாத பா.ஜ.க! – அன்வர் ராஜா கருத்து

 

அ.தி.மு.க கூட்டணியை விரும்பாத பா.ஜ.க! – அன்வர் ராஜா கருத்து

கோவையில் கோயில்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை எதிர்த்து பா.ஜ.க தரப்பில் மிகக் கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டன. பா.ஜ.க தலைவர்களின் செயல்பாடு அ.தி.முக கூட்டணியை அவர்கள் விரும்பவில்லை என்பதையே காட்டுகிறது என்று அன்வர் ராஜா கருத்து தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க கூட்டணியை விரும்பாத பா.ஜ.க! – அன்வர் ராஜா கருத்து
கோவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த தமிழக பா.ஜ.க முன்னாள் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் தமிழக அரசு உறுதியாக இருக்க வேண்டும். இல்லை என்றால் வருகிற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க வெற்றிபெறாது என்றார். இதற்கு அ.தி.மு.க தரப்பில் அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி கொடுத்திருந்தார்.

அ.தி.மு.க கூட்டணியை விரும்பாத பா.ஜ.க! – அன்வர் ராஜா கருத்துஇதற்கு முன்னதாக தமிழகத்தில் பா.ஜ.க பங்கேற்கும் கூட்டணி அரசுதான் அடுத்து அமையும் என்று தமிழக பா.ஜ.க தலைவர் முருகன் தெரிவித்திருந்தார். இவை எல்லாம் அ.தி.மு,க கூட்டணிக்குள் புகைச்சல் ஏற்பட்டுள்ளதை உறுதி செய்தது.
இது குறித்து முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா கூறுகையில், 2016ம் ஆண்டு கூட்டணியே இல்லாமல் அ.தி.மு.க வெற்றி பெற்று ஆட்சியை அமைத்தது. அப்படி இருக்கும்போது சி.பி.ராதாகிருஷ்ணன், முருகன் உள்ளிட்டோர் சொல்லக்கூடிய கருத்தில் எவ்வளவு உண்மை உள்ளது? எவ்வளவு உள்நோக்கம் உள்ளது என்பதற்கு எல்லாம் காலம்தான் பதில் சொல்லும். அவர்களுடைய செயல்பாட்டைப் பார்க்கும்போது அ.தி.மு.க-வுடன் கூட்டணி வேண்டாம் என்று அவர்கள் முடிவு செய்துவிட்டது போல் உள்ளது” என்றார்.