கோலியை அலேக்கா தூக்கிய அனுஷ்கா! வைரலாகும் வீடியோ

 

கோலியை அலேக்கா தூக்கிய அனுஷ்கா! வைரலாகும் வீடியோ

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியை அவரது மனைவியும் நடிகையுமான அனுஷ்கா சர்மா தூக்கிய வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது. இந்திய கிரிக்கெட் அணி்யின் கேப்டன் விராட் கோலியும் நடிகை அனுஷ்கா சர்மாவும் கடந்த 2017ல் திருமணம் செய்துகொண்டனர். இந்த காதல் தம்பதிகளுக்கு கடந்த ஜனவரி மாதம் பெண் குழந்தை பிறந்தது.

ஐபில் 14 வது போட்டிக்கு தயாராகி வரும் விராட் கோலியை அவரது மனைவி அனுஷ்கா சர்மா அவரை தூக்கி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளார். இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் அனுஷ்கா. அந்த வீடியோவில் விராட் கோலியை பின்புறத்திலிருந்து ஒரு இன்ச் மேலே அலேக்காக தூக்குகிறார் அனுஷ்கா.

கோலியை அலேக்கா தூக்கிய அனுஷ்கா! வைரலாகும் வீடியோ

இதனை சற்றும் எதிர்பார்க்காத கோலி மீண்டும் தூக்குமாறு கேட்டுக்கொண்டார். இதனையடுத்து அதேபோல் இரண்டாவது முறையாக தூக்கினார். இந்தவீடியோவுடன் என்னால் இது முடிந்ததுதானே என இன்ஸ்டாவில் அனுஷ்கா பதிவிட்டதற்கு ஏராளமான ரசிகர்கள் லைக்ஸை அள்ளி தெளித்துவருகின்றனர்.