வெளியான கோலி-அனுஷ்காவின் சீக்ரெட்!

 

வெளியான கோலி-அனுஷ்காவின் சீக்ரெட்!

இந்திய கேப்டன் விராட் கோலிக்கும் அவரது மனைவியான நடிகை அனுஷ்கா சர்மாவுக்கும் சில தினங்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்தது. கிரிக்கெட் வீரர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

வெளியான கோலி-அனுஷ்காவின் சீக்ரெட்!

நேற்று வரை குழந்தையின் பெயரை கோலி வெளியிடமால் சஸ்பென்ஸாக வைத்திருந்தார். இச்சூழலில் அனுஷ்கா சர்மா இன்ஸ்டாவில் இன்று வெளியிட்ட பதிவின் மூலம் சஸ்பென்ஸ் உடைந்தது.

அனுஷ்கா குழந்தையைக் கையில் ஏந்தியவாறு கோலியும் அவரும் குழந்தையைப் பார்த்து சிரிப்பது போன்ற புகைப்படம் ஒன்றை அப்பதிவுடன் இணைத்துள்ளார். “நானும் கோலியும் அன்பான, மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருந்தோம். தற்போது எங்களிடம் இணைந்திருக்கும் ‘வாமிகா’ (Vamika) அதனை வேறு ஒரு இடத்திற்கு எடுத்துச் சென்றுவிட்டாள். உங்களது பிரார்த்தனைக்கும் அன்புக்கும் நன்றி” என்று கூறியுள்ளார். இதன் மூலம் குழந்தையின் பெயர் வாமிகா என்று தெரியவந்துள்ளது.