• December
    06
    Friday

Main Area

Main



படப்பிடிப்பில் அனுஷ்காவிற்கு ஏற்பட்ட விபத்து! சோகத்தில் ரசிகர்கள்! 

நடிகை அனுஷ்கா
நடிகை அனுஷ்கா

சென்னை:  படப்பிடிப்பில் நடிகை அனுஷ்காவிற்குப் பலமான காயம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

தெலுங்கில் பிரமாண்டமாக உருவாக்கி வரும் திரைப்படம் சைரா நரசிம்ம ரெட்டி. நடிகர் சிரஞ்சீவி ஹீரோவாக நடிக்க அவருடன் இணைந்து அமிதாப்பச்சன், நயன்தாரா, விஜய் சேதுபதி, தமன்னா ஆகியோர் நடிக்கின்றனர். 

anushkka

மேலும் இந்த படத்தில் நடிகை அனுஷ்கா முக்கிய தோற்றத்தில் நடித்து வந்தார். இந்த நிலையில் ஷூட்டிங் வேலையில் குறிப்பிட்ட காட்சியில் நடித்து கொண்டு இருந்த போது , எதிர்பாரா விதமாகக் கீழே விழுந்ததில், அவருக்கு காலில் பலமான காயம் ஏற்பட்டது. 

 

உடனே அவரை படக்குழு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், காலில் முறிவு ஏற்பட்டுள்ளதாகக் கூறினார். அதனை தொடர்ந்து இவர்  கண்டிப்பாக ஒரு வாரம் வரை முழு ஓய்வில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அனுஷ்காவின் ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர். 

2018 TopTamilNews. All rights reserved.