சனி பகவான் ஆதிக்கம் கொண்ட நட்சத்திரம் – அனுஷம் பொதுப் பலன்கள்

அனுஷம் நட்சத்திரம் சனிபகவானின் ஆதிக்கத்துக்கு உட்பட்ட நட்சத்திரம் ஆகும்.

அனுஷம் நட்சத்திரம் சனிபகவானின் ஆதிக்கத்துக்கு உட்பட்ட நட்சத்திரம் ஆகும்.

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கவர்ச்சியான தோற்றம் கொண்டவர்களாக இருப்பார்கள். மற்றவர்களிடமிருந்து வித்தியாசமான  சிந்தனை கொண்டவர்களாக இருப்பார்கள். தங்கள் பெற்றோரிடம் அதிக அன்பு காட்டுவார்கள். பெற்றோரை அவர்களின் கடைசி காலம் வரை நன்றாக பார்த்துக் கொள்ள நினைப்பார்கள். அனுஷ நட்சத்திரக்காரர்கள் இரக்க சுபாவம் கொண்டவர்களாக இருப்பார்கள். அமைதியை எப்போதும் விரும்பினாலும் சண்டை என வந்துவிட்டால் இரண்டில் ஒன்று பார்க்கக் கூடியவர்கள். கொள்கைப் பிடிப்பு அதிகம் கொண்டவர்களாக இருப்பார்கள். தவறு யார் செய்தாலும் தட்டிக் கேட்கத் தயங்க மாட்டார்கள். மற்றவர்களுக்கு வேலை கொடுப்பவர்களாக திகழ்வார்கள். ஒருவரிடம் கைகட்டி  வேலை பார்ப்பதை விரும்ப மாட்டார்கள்.

sani baghavan

மற்றவர்களின் துன்ப நேரத்தில் உதவினாலும், தங்களுக்கு பிரச்னை ஏற்படும்போது அதை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பல விஷயங்களில் ஞானம் பெற்றவர்களாக இருப்பார்கள். அனுஷ நட்சத்திரக்காரர்கள் எந்த பாலினமாக இருந்தாலும் எதிர்ப் பாலினரால் விரும்பப்படுவார்கள். எடுத்த காரியத்தை எப்படியாவது முடிக்க வேண்டும் என்று உறுதியாக இருப்பார்கள். தங்கள் குடும்பத்தினரிடம் அதிக பாசம் வைத்திருப்பார்கள். தங்கள் துணைக்கு சம உரிமை கொடுப்பார்கள். எந்த சூழலிலும் வாழப் பழகிக் கொள்வார்கள். வாழ்க்கையில் ஏற்ற, இறக்கங்கள் இருந்தாலும் மனம் சோர்ந்து போக மாட்டார்கள். அனுஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எல்லோரிடமும் சகஜமாகப் பழகுவார்கள். சமூகத்துக்கு நன்மை செய்யக் கூடியவர்களாக இருப்பார்கள்.

- Advertisment -

Most Popular

இந்த வாரம் முதலீட்டாளர்களுக்கு ரூ.1.71 லட்சம் கோடி லாபம்… சென்செக்ஸ் 850 புள்ளிகள் உயர்ந்தது..

இந்திய பங்குச் சந்தைகளில் இந்த வாரம் ஒட்டு மொத்த அளவில் ஏற்றம் கண்டது. இந்த வாரத்தின் முதல் 2 தினங்களில் வர்த்தம் முதலீட்டாளர்களை ஏமாற்றியது. இருப்பினும் அதற்கு அடுத்த 3 நாட்களில் பங்கு...

ஊரடங்கால் வீட்டில் முடங்கினாலும் உடல்நலனில் அக்கறை தேவை!

ஊரடங்கு... எல்லோர் வாழ்க்கையையும் புரட்டிப்போட்டிருக்கிறது. ஒட்டுமொத்த குடும்பமும் மாதக்கணக்கில் வீடுகளில் முடங்கிக் கிடக்கிறது. முதல்நாள் பார்த்த தன் தந்தையின் முகத்தை மறுநாள் காலையில் பார்த்த பிள்ளைகள் இப்போது நாள் முழுக்க பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்....

கொரோனோ நோயாளிகளின் வசதிக்காக பேட்டரி கார் வசதி அறிமுகம்

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனோ நோயாளிகளின் வசதிக்காக பேட்டரி கார் வசதி நாளை அறிமுகப்படுத்தப்படுகிறது. சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனோ வார்டில் தீவிர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளை அழைத்து செல்வதற்காக...

ரத்தசோகை போக்கும் முளைக்கீரை வடை!

கீரை வடை... டீக்கடைகளிலும், ஹோட்டல்களிலும் சாப்பிட்ட இந்தக் கீரை வடையை வீடுகளிலும் செய்து சாப்பிடலாம். இன்றைய சூழலில் சுகாதாரமான, சுத்தமான உணவு கிடைக்குமா? என்ற ஏக்கம் உள்ளது. எனவே, நம் வீடுகளில் இந்தக்...
Open

ttn

Close