டிராக்டர்களில் சோபா அமைத்து விவசாயிகளுக்காக சிலர் போராடுகிறார்கள்… ராகுலை கிண்டல் செய்த அனுராக் தாக்கூர்

டிராக்டர்களில் சோபா அமைத்து விவசாயிகளுக்காக சிலர் போராடுகிறார்கள்… ராகுலை கிண்டல் செய்த அனுராக் தாக்கூர்

டிராக்டர்களில் சோபா இருக்கை அமைப்பதன் மூலம் சிலர் விவசாயிகளுக்காக போராடுகிறார்கள் என்று ராகுல் காந்தியை மத்திய இணையமைச்சர் அனுராக் தாக்கூர் மறைமுகமாக கிண்டல் செய்தார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள விவசாய சட்டங்களை எதிராக விவசாயிகள் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன. குறிப்பாக பஞ்சாப் மற்றும் ஹரியானா விவசாயிகள் புதிய வேளாண் சட்டங்களை கடுமையாக எதிர்த்து வருகின்றனர். அண்மையில் பஞ்சாபில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக காங்கிரஸ் நடத்திய டிராக்டர் பேரணியில் ராகுல் காந்தி கலந்து கொண்டார்.

டிராக்டர்களில் சோபா அமைத்து விவசாயிகளுக்காக சிலர் போராடுகிறார்கள்… ராகுலை கிண்டல் செய்த அனுராக் தாக்கூர்
அனுராக் தாக்கூர்

வேளாண் சட்டங்களுக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம் செய்வதை மத்திய இணையமைச்சர் அனுராக் தாக்கூர் விமர்சனம் செய்தார். மேலும், டிராக்டரில் பிரத்யேகமாக சோபா இருக்கை அமைத்து அதில் அமர்ந்து வந்த ராகுல் காந்தியை மறைமுகமாகவும் அவர் கிண்டல் அடித்துள்ளார். இது தொடர்பாக அனுராக் தாக்கூர் கூறியதாவது: 2022ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக மத்திய அரசு செயல்பட்டு வருவதால், புதிதாக இயற்றப்பட்ட வேளாண் சட்டங்கள் குறித்து காங்கிரஸ் அரசியல் செய்கிறது.

டிராக்டர்களில் சோபா அமைத்து விவசாயிகளுக்காக சிலர் போராடுகிறார்கள்… ராகுலை கிண்டல் செய்த அனுராக் தாக்கூர்
காங்கிரஸ்

விவசாயிகள் பெயரில் காங்கிரஸ் அரசியல் செய்கிறது. நாம் அவர்களுக்கு சுயாட்சி மற்றும் சுதந்திரம் வழங்க பணியாற்றுகிறோம். 2022 பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலை கருத்தில் கொண்டு விவசாயிகள் பெயரில் காங்கிரஸ் அரசியல் செய்கிறது. டிராக்டர்களில் சோபா சீட்டுகளை அமைத்து விவசாயிகளுக்காக சிலர் கிளர்ச்சி செய்கிறார்கள். இது அவர்களின் உண்மையான முகத்தை காட்டுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.