• March
    31
    Tuesday

Main Area

Main



54 மீ. உயரம் கொண்ட ஸ்கைலிப்ட் ஏணிகள் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணி தொடக்கம்!

கிருமிநாசினி
கிருமிநாசினி

உலகம் முழுவதும் அதிவேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை தடுக்க அனைத்து நாடுகளும் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பல நாடுகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக அதிநவீன இயந்திரங்களைக் கொண்டு கிருமி நாசினி தெளிக்கபட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்திலும் இயந்திரங்களைக் கொண்டு கிருமி நாசினி தெளிக்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. 

ttn

தீயணைப்பு துறையினரும், மீட்புப்பணி துறையினரும் சேர்ந்து நேற்று முதல் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் நேற்று நொச்சிக்குப்பம், சீனிவாசபுரம், பட்டினப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளில் 54 மீட்டர் உயரம் கொண்ட ஸ்கைலிப்ட் ஏணிகள் மூலம் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

ttn

அப்போது பேசிய டிஜிபி சைலேந்திரபாபு, கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் மொத்தம் 7,500 தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளதாகவும், மாவட்ட ஆட்சியர்களின் கண்காணிப்பில் 271 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 60 மினி வாகனங்களில் கிருமி நாசினி தெளிப்பு பணியில் ஈடுபட்டு வருவதாகவும் கூறினார். 

2018 TopTamilNews. All rights reserved.