சென்னையில் இரு சக்கர வாகனங்களில் கிருமிநாசினி தெளிக்கும் பணி தொடக்கம்!

 

சென்னையில் இரு சக்கர வாகனங்களில் கிருமிநாசினி தெளிக்கும் பணி தொடக்கம்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிவேகமாக பரவி வருகிறது. ஒரு நாளைக்கு 400 முதல் 600 வரையிலேயே அதிகரித்து வந்த பாதிப்பு, கடந்த 3 நாட்களாக 1000க்கும் மேற்பட்ட மக்களுக்கு பரவி வருகிறது. இருப்பினும், தமிழகத்தில் கொரோனா வைரஸ் சமூக பரவலாக இல்லை என்று முதல்வர் தெரிவித்திருக்கிறார். மின்னல் வேகத்தில் பரவி வரும் இந்த கொரோனா வைரஸை தடுக்க தமிழக அரசும் மாவட்ட நிர்வாகங்களும் இணைந்து அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக சென்னையில் தான் கொரோனா பாதிப்பு மிக அதிக அளவில் இருக்கிறது. சென்னையில் மட்டுமே 16,000க்கும் மேற்பட்ட மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் இரு சக்கர வாகனங்களில் கிருமிநாசினி தெளிக்கும் பணி தொடக்கம்!

அதுமட்டுமில்லாமல் கடந்த சில நாட்களாக சென்னையில் உயிரிழப்புகளும் அதிகரித்த வண்ணம் உள்ளன. இத்தகைய கொடிய வகை கொரோனா வைரஸில் இருந்து மக்களை காக்க சுகாதாரத்துறையினர் அயராது உழைத்து வருகின்றனர். கிருமி நாசினி மூலமாகவே இந்த கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியும் என்னும் இந்த நிலையில், சென்னையில் இரு சக்கர வாகனங்களில் கிருமிநாசினி தெளிக்க முடிவு செய்யப்பட்டது. அதன் படி, தீயணைப்பு துறை சார்பில் கிருமி நாசினி தெளிக்கும் 25 இருசக்கர வாகனங்களின் சேவையை முதல்வர் பழனிசாமி துவக்கி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.