“அதிகரிக்கும் காற்று மாசு” புகை எதிர்ப்பு துப்பாக்கிகள் பயன்படுத்தும் டெல்லி அரசு !

 

“அதிகரிக்கும் காற்று மாசு” புகை எதிர்ப்பு துப்பாக்கிகள் பயன்படுத்தும் டெல்லி அரசு !

அதிகரிக்கும் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் விதமாக, டெல்லியின் பல இடங்களில் புகை எதிர்ப்பு துப்பாக்கிகள் பொருத்தப்பட்டுள்ளன.

டெல்லியில் காற்று மாசு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருக்கிறது. தற்போது வட மாநிலங்களில் அறுவடை முடிந்து, விளைநிலங்கள் எரிக்கப்பட்டு வருவதே இதற்கு காரணம். ஆண்டுதோறும் காற்று மாசு, பெரும் பிரச்னையாக உள்ளது. இதனால் மக்களுக்கு சுவாச பிரச்னை ஏற்பட்டு பெரும் அவதிப்படுவதால், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

“அதிகரிக்கும் காற்று மாசு” புகை எதிர்ப்பு துப்பாக்கிகள் பயன்படுத்தும் டெல்லி அரசு !

காற்று மாசை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், அதன் ஒரு பகுதியாக 7ம் தேதி முதல் 30ம் தேதி வரை டெல்லியில் இந்த ஆண்டு பட்டாசுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், டெல்லியின் பல இடங்களில் தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் மாசு எதிர்ப்பு இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. அந்த இயந்திரத்தின் மூலம், காற்று மாசை கட்டுப்படுத்த முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.