இந்து எதிர்ப்பு – தேய்பிறையாகும் திமுக செல்வாக்கு

 

இந்து எதிர்ப்பு – தேய்பிறையாகும் திமுக செல்வாக்கு

வளர்பிறையாக இருந்த திமுக செல்வாக்கு, இந்து எதிர்ப்புணர்வு காரணமாக தேய்பிறையாக சுருங்கி வருவதாக அந்தக் கட்சியினரே கவலை தெரிவிக்கின்றனர்.
திராவிட கட்சிகளின் ஆதிக்கம் மிகுந்த தமிழகத்தில் இந்துமத உணர்வுகளை, இந்துக்களை கொச்சைப்படுத்தி பேசும் போக்கு நீண்ட காலமாகவே இருந்து வந்தது. ஆனால் மத்தியில் மோடி தலைமையில் பாஜக ஆட்சி அமைந்த பிறகு இந்த நிலைமையில் மாற்றம் ஏற்பட்டது. இந்துக்களை கொச்சைப்படுத்தும்

இந்து எதிர்ப்பு – தேய்பிறையாகும் திமுக செல்வாக்கு

பேச்சுக்களுக்கு உடனடியாக பதிலடி தரப்பட்டது. இப்படி கொச்சைப்படுத்தி பேசுபவர்களுக்கு எதிராக இந்து அமைப்புகள் மற்றும் கட்சிகள் போராட்டங்களில் ஈடுபட்டன. சமூகவலைத்தளங்களில் இந்துக்கள் தங்களது எதிர்ப்பை தீவிரமாக பதிவு செய்தனர். இதன் காரணமாக இந்து எதிர்ப்பாளர்கள் கொஞ்சம் அடக்கி வாசிக்க ஆரம்பித்தனர். எனினும் அவ்வப்போது இவர்கள் தங்கள் ’இந்து துவேஷத்தை’ வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்து எதிர்ப்பு – தேய்பிறையாகும் திமுக செல்வாக்கு


கடந்த சில மாதங்களுக்கு முன்பு கந்தசஷ்டி கவசத்தை கொச்சைப்படுத்தி கருப்பர் கூட்டம் என்ற அமைப்பினர் பேசியது பெரும் சர்ச்சையானது. இதன் பின்னணியில் திமுக உள்ளிட்ட கட்சிகள் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது தொடர்பான விசாரணை தற்போதும் நிலுவையில் உள்ளது.
இந்தநிலையில் மனுஸ்மிரிதியில் பெண்களை அவமதிக்கும் வகையில் கருத்துக்கள் இருப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ’புதிய கண்டுபிடிப்பை’ வெளியிட இந்து அமைப்புகளும், பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இது தொடர்பாக திருமாவளவன் மீது வழக்குகளும் தொடரப்பட்டுள்ளன.
மனுஸ்மிரிதியை முறையாகப் படிக்காமல் மேலோட்டமாக அங்கும், இங்கும் சில கருத்துக்களை படித்துவிட்டு, அதையும் திரித்து சொல்வது எப்படி சரியாகும்? என பலரும் திருமாவுக்கு எதிராகக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்து எதிர்ப்பு – தேய்பிறையாகும் திமுக செல்வாக்கு

ஆனால் திருமா பேசியது சரிதான் என திமுக தலைவர் ஸ்டாலின் அவருக்கு வக்காலத்து வாங்கியிருப்பதை அந்தக் கட்சியினரே ரசிக்கவில்லை.
இதுபற்றி நம்மிடம் பேசிய பெயர் குறிப்பிட விரும்பாத திமுக மூத்த நிர்வாகி ஒருவர், ‘’ காலத்திற்கு பொருந்தாத கருத்துக்களையெல்லாம் எங்க தலைவர் தூக்கி சுமப்பதை பார்த்தால் கஷ்டமா இருக்குது. இன்றைக்கு திமுகவில் இருப்பவர்களில் பெரும்பாலானோர் இந்துக்கள்தான். இவர்கள் இந்து தர்மங்களை கடைபிடிப்பதோடு வெளிப்படையாகவே கோயில்களுக்கும் சென்று வருகிறார்கள். இவ்வளவு ஏன்…ஸ்டாலினோட மனைவி உள்ளிட்ட அவங்க குடும்ப ஆட்கள் பலருமே கோயில்களுக்கு சென்று வருபவர்கள்தான். நிலைமை

இந்து எதிர்ப்பு – தேய்பிறையாகும் திமுக செல்வாக்கு

இப்படியிருக்கும்போது இந்து எதிர்ப்பு என்கிற நாடகத்தை ஏன் நடத்தணும்?
திமுக தலைமையின் இந்த இரட்டை வேடத்தை சாதாரண தொண்டர்கள் கூட புரிஞ்சி வெச்சிருக்காங்க. ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜைக்கு ஜனாதிபதியில் இருந்து சாதாரண தலைவர்கள்வரை அத்தனை பேரும் வாழ்த்து சொல்றாங்க. ஆனால் இந்த பண்டிகைக்கும் சரி, தீபாவளி போன்ற இந்து பண்டிகைகளுக்கும் சரி ஸ்டாலின் சம்பிரதாயமாக கூட வாழ்த்து சொல்றதில்லை. அதேநேரம் பக்ரீத், ரம்ஜான், கிறிஸ்மஸ் போன்ற மற்ற மதங்களின் பண்டிகைகளுக்கு முதல் ஆளா வாழ்த்து சொல்றாரு. திமுக தலைமையின் இந்த பாரபட்சமான போக்கு இப்ப அம்பலமாகிட்டு வருது. இதன் எதிரொலி வரும் தேர்தலில் நிச்சயம் தெரியும்’’ என்றார்.