பண மோசடி; ஈரோட்டில் தலைமையாசிரியர் வீட்டில் திடீர் ரெய்டு!

 

பண மோசடி; ஈரோட்டில் தலைமையாசிரியர் வீட்டில் திடீர் ரெய்டு!

ஈரோடு அருகே அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஏமாற்றிய தலைமையாசிரியர் வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டது.

சேலம் மாவட்டம் கருமந்துறை மலை கிராமத்தில் வசித்து வரும் வெங்கடேசன் என்பவர் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவர் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பலரிடம் பணம் மோசடி செய்ததாக அடுக்கடுக்காக புகார்கள் எழுந்தது. அதுமட்டுமல்லாமல் கடந்த 2015ஆம் ஆண்டு ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் மாணவர் விடுதிகளில் சமையலர் பணிக்கு போலி ஆணை வழங்கியதாக 56 பேர் பணியிலிருந்து நீக்கப்பட்ட சம்பவத்திலும் இவருக்கு தொடர்பு இருந்ததாக புகார்கள் எழுந்தது.

பண மோசடி; ஈரோட்டில் தலைமையாசிரியர் வீட்டில் திடீர் ரெய்டு!

இதையடுத்து அவரது ஆவணங்களை ஆய்வு செய்து அறிக்கை தருமாறு லஞ்ச ஒழிப்பு துறைக்கும் கல்வித் துறைக்கும் அரசு தரப்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதனடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவர் வருமானத்திற்கு அதிகமாக பல மடங்கு சொத்து இருப்பதாக தெரிய வந்தது. அந்த தகவலின் பேரிலேயே இன்று அவரது வீட்டில் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நடத்தப்பட்டது. சோதனையின் போது பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தலைமையாசிரியர் வெங்கடேசன் மீது பல வழக்குகள் பதிவாகி இருப்பதாக கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.