‘கட்டுக் கட்டாக பணம், நகை பறிமுதல்’ : சுற்றுச்சூழல் துறை ஊழியரிடம் கிடுக்குப்பிடி விசாரணை!

‘கட்டுக் கட்டாக பணம், நகை பறிமுதல்’ : சுற்றுச்சூழல் துறை ஊழியரிடம் கிடுக்குப்பிடி விசாரணை!

லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளிடம் சிக்கியிருக்கும் சுற்றுச்சூழல் துறை கண்காணிப்பாளர் பாண்டியனிடம், தீவிர விசாரணை நடத்தப்பட உள்ளது.

‘கட்டுக் கட்டாக பணம், நகை பறிமுதல்’ : சுற்றுச்சூழல் துறை ஊழியரிடம் கிடுக்குப்பிடி விசாரணை!

சென்னை பனகல் மாளிகையில் இருக்கும் சுற்றுச்சூழல் துறை அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றி வரும் பாண்டியன் என்பவருக்கு சொந்தமான இடங்களில், லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கடந்த 15ம் தேதி அதிரடி சோதனை நடத்தினர். அதில் ரூ.1.37 கோடி பணம், ரூ.7 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், ரூ.37 லட்சம் வைப்பு நிதி, ரூ.5.40 லட்சம் மதிப்பிலான வைரம் உள்ளிட்ட அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டது. சுற்றுச்சூழல்துறை கண்காணிப்பாளராக பணியாற்றி வரும் பாண்டியன் வீட்டில் இவ்வளவு பணமும் நகையும் பறிமுதல் செய்யப்பட்டது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

‘கட்டுக் கட்டாக பணம், நகை பறிமுதல்’ : சுற்றுச்சூழல் துறை ஊழியரிடம் கிடுக்குப்பிடி விசாரணை!

இந்த நிலையில், கைது செய்யப்பட்ட பாண்டியனிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட வைப்புத் தொகை, ஆவணங்கள் குறித்தும் கணக்கில் வராத பணம் நகை மற்றும் சொத்துக்கள் குறித்தும் விசாரணை நடத்தப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதிக அளவு சொத்து விவகாரத்தில் உயர் அதிகாரிகளுக்கும் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்திலும் விசாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் சுற்றுச்சூழல் துறையிடம் இருந்து அதிகபட்சமாக ரூ.5.50 கோடி லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.