‘ஊழலில் சிக்கிய சுற்றுச்சூழல்துறை அதிகாரி’ – லாக்கர்களை சோதனை செய்ய திட்டம்!

 

‘ஊழலில் சிக்கிய சுற்றுச்சூழல்துறை அதிகாரி’ – லாக்கர்களை சோதனை செய்ய திட்டம்!

லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் சிக்கியிருக்கும் சுற்றுச்சூழல்துறை கண்காணிப்பாளர் பாண்டியனின் லாக்கர்களில் சோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை பனகல் மாளிகையில் இருக்கும் சுற்றுச்சூழல்துறை அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றி வரும் பாண்டியன் வீட்டில், லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய சோதனையில் ரூ.1.37 கோடி கணக்கில் வராத பணம், 3 கிலோ தங்க நகைகள், ரூ.10 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கண்காணிப்பாளராக பணியாற்றி வரும் பாண்டியன் வீட்டில் இருந்து, இவ்வளவு பணம் பறிமுதல் செய்யப்பட்டது சர்ச்சையை கிளப்பியது.

‘ஊழலில் சிக்கிய சுற்றுச்சூழல்துறை அதிகாரி’ – லாக்கர்களை சோதனை செய்ய திட்டம்!

ஊழல் செய்து பாண்டியன் இவ்வளவு சொத்துக்கள் சேர்த்தது தெரிய வந்ததையடுத்து, அவரிடம் நேற்று லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். இந்த ஊழலில் மற்ற அரசு அதிகாரிகளுக்கு தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை பாண்டியன் லாக்கரில் வைத்து இருக்கலாம் என சந்தேகிக்கும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் லாக்கர்களில் சோதனை செய்ய திட்டமிட்டுள்ளனர். இதற்கான அனுமதி கேட்டு, வங்கிகளுக்கு கடிதமும் எழுதியுள்ளனர்.