“ஸ்டாலின் தலைமையில் ஆட்சியமைக்க மக்கள் முடிவெடுத்து விட்டனர்” – கனிமொழி

“ஸ்டாலின் தலைமையில் ஆட்சியமைக்க மக்கள் முடிவெடுத்து விட்டனர்” – கனிமொழி

ஈரோடு

அதிமுக ஆட்சியை பொதுமக்கள் விரும்பவில்லை என்றும், திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைக்க மக்கள் முடிவெடுத்து உள்ளதாகவும், திமுக எம்.பி கனிமொழி தெரிவித்தார்.

“ஸ்டாலின் தலைமையில் ஆட்சியமைக்க மக்கள் முடிவெடுத்து விட்டனர்” – கனிமொழி

ஈரோடு மாவட்டத்தில் “விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்” என்ற தலைப்பில் பிரசார பயணம் மேற்கொண்டு வரும் கனிமொழி, இன்று அந்தியூர் வாரச்சந்தையில் பொதுமக்களையும், வியாபாரிகளையும் சந்தித்து பேசினார். அப்போது அந்தியூர் சந்தையை வேறு இடத்திற்கு மாற்றும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் முறையீடு செய்தனர். அதனை கேட்ட கனிமொழி, சந்தை இதே பகுதியில் தொடர நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

“ஸ்டாலின் தலைமையில் ஆட்சியமைக்க மக்கள் முடிவெடுத்து விட்டனர்” – கனிமொழி

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போதைய அதிமுக ஆட்சியை பொதுமக்கள் விரும்பவில்லை என்றும், ஆட்சியை கலைத்துவிட்டு, திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைக்க மக்கள் முடிவெடுத்து உள்ளதாக தெரிவித்தார். மேலும், பொதுமக்களின் எதிர்பார்ப்பை எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் நிறைவேற்றி, நல்ல பல திட்டங்களை செயல்படுத்த திமுக அரசு காத்துக் கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார். அத்துடன், அந்தியூர் சந்தையில் சுகாதாரம் கேள்விக்குறியாக உள்ளதாக குற்றம்சாட்டிய கனிமொழி, வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க தமிழக அரசு விரைந்து செயலாற்ற வேண்டும் எனவும் கேட்டுகொண்டார்.