சரத்குமாரைத் தொடர்ந்து இரண்டு கோலிவுட் பிரபலங்களுக்கு வலை விரித்த பா.ஜ.க! – நட்சத்திரங்களால் நிரப்பத் திட்டம்

 

சரத்குமாரைத் தொடர்ந்து இரண்டு கோலிவுட் பிரபலங்களுக்கு வலை விரித்த பா.ஜ.க! – நட்சத்திரங்களால் நிரப்பத் திட்டம்

தமிழக பா.ஜ.க-வில் சரத்குமாரை இணைக்கும் பேச்சு வார்த்தை முடிந்துவிட்டதாக கூறப்படும் நிலையில், இரண்டு திரைத் துறை பிரபலங்களை பா.ஜ.க-வில் சேர்ப்பதற்கான பேச்சு வார்த்தை நடந்து வருவதாக பா.ஜ.க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழக சட்டமன்றத்துக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இதற்குள்ளாக கட்சியைப் பலப்படுத்த பா.ஜ.க தலைவராக பொறுப்பேற்றுள்ள முருகனுக்கு கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளது. அவர் தலைவரான நேரம் நாடு முழுக்க கொரோனா காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதனால், துடிப்புடன் பணியாற்ற முடியாமல் நிவாரணப் பணிகள். கட்சியின் வழக்கமான பணிகளில் ஈடுபட்டுள்ளார் முருகன்.

சரத்குமாரைத் தொடர்ந்து இரண்டு கோலிவுட் பிரபலங்களுக்கு வலை விரித்த பா.ஜ.க! – நட்சத்திரங்களால் நிரப்பத் திட்டம்
இந்த நேரத்தில் மாற்றுக்கட்சியைச் சேர்ந்தவர்களை பா.ஜ.க-வில் இணைப்பதற்கான வேலையிலும் மும்முரமாக ஈடுபட்டுள்ளார் முருகன். தி.மு.க-வின் வி.பி.துரைசாமியை வெற்றிகரமாக பா.ஜ.க-வுக்கு அழைத்து வந்துவிட்டார். சரத் குமாரின் சமத்துவ மக்கள் கட்சியை பா.ஜ.க-வுடன் இணைக்க ஏற்பாடு செய்து வருகிறார். அடுத்ததாக டி.ராஜேந்தரை பா.ஜ.க-வில் இணைக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. அதே போல் எம்.ஜி.ஆர் என்னுடைய கலைத்துறை வாரிசு என்று அறிவித்த பாக்கியராஜையும் பா.ஜ.க-வில் சேர்க்க பேசப்பட்டு வருகிறதாம்.

சரத்குமாரைத் தொடர்ந்து இரண்டு கோலிவுட் பிரபலங்களுக்கு வலை விரித்த பா.ஜ.க! – நட்சத்திரங்களால் நிரப்பத் திட்டம்

இவரும் தங்களுக்கு முக்கிய பதவி அளிக்கப்படும் பட்சத்தில் பா.ஜ.க-வில் இணைவதில் தயக்கமில்லை என்று கூறியுள்ளோர்களாம். தேர்தலுக்கு முன்பாக தமிழக சினிமா பிரபலங்கள் பலரை கட்சியில் இணைந்து மக்கள் மத்தியில் பா.ஜ.க-வுக்கு ஆதரவு அதிகரித்துவிட்ட மனநிலையை உருவாக்க பா.ஜ.க தலைவர் தீவிரமாக செயலாற்றி வருவதாக கூறப்படுகிறது.
முருகனின் இந்த செயல்பாடுகளால் எச்.ராஜா உள்ளிட்டவர்கள் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது. மூத்த தலைவர்களை விட்டுவிட்டு புதிதாக கட்சியில் இணைந்தவர்களுக்கு முக்கியத்துவம் தருவது பிரச்னை ஏற்படுத்தும் என்றும் எச்சரித்துள்ளோர்களாம்.