’வருமான வரி கட்ட வில்லை’ ‘அது பொய் செய்தி’ – அமெரிக்க அதிபருக்கு இன்னொரு தலைவலி

 

’வருமான வரி கட்ட வில்லை’ ‘அது பொய் செய்தி’ – அமெரிக்க அதிபருக்கு இன்னொரு தலைவலி

அமெரிக்கத் தேர்தல் நெருங்க, நெருங்க பல விஷயங்கள் வெளியே வருகின்றன.

வரும் நவம்பர் மாதம் 3-ம் தேதியன்று அமெரிக்காவில் தேர்தல் நடக்கவிருக்கிறது. குடியரசுக் கட்சி சார்ப்பில் தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் அதிபர் போட்டியில் குதிக்கிறார். ஜனநாயக் கட்சியின் சார்பில் அமெரிக்க அதிபர் வேட்பாளராகப் போட்டியிடுகிறார் ஜோ பிடன். துணை அதிபராக ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட இந்திய வம்சாவளி பெண் கமலா ஹாரீஸைத் தேர்வு செய்யப்படிருக்கிறார்.

’வருமான வரி கட்ட வில்லை’ ‘அது பொய் செய்தி’ – அமெரிக்க அதிபருக்கு இன்னொரு தலைவலி

இந்தத் தேர்தலில் இரு கட்சிகளும் ஒருவரை ஒருவர் எதிர்த்து கடும் குற்றச்சாட்டுகளுடன் பிரச்சாரம் செய்துவருகின்றனர். அமெரிக்காவின் அதிபர் ட்ரம்ப் மீது சில நாட்களுக்கு முன் பாலியல் குற்றச்சாட்டு கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது அவர் வரி கட்டுவது தொடர்பாகப் புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது.

நியூயார்க் டைம்ஸ் இதழில், ‘அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தம் வருமானத்தை மிகக் குறைவாகக் காட்டி வருகிறார். அவர் நடத்தி வரும் தொழில்களில் பலத்த இழப்பு வருதாகக் காட்டியுள்ளார். கடந்த 15 ஆண்டுகளில் சுமார் 10 ஆண்டுகள் அவர் முறையாக வருமான வரி கட்டவில்லை. 2016 – 17 ஆம் ஆண்டுகளில் 750 டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 55 ஆயிரம் ரூபாய்) மட்டுமே கட்டியுள்ளார்’ என்று குறிப்பிட்டிருந்தது.

’வருமான வரி கட்ட வில்லை’ ‘அது பொய் செய்தி’ – அமெரிக்க அதிபருக்கு இன்னொரு தலைவலி

இந்த விவகாரம் அமெரிக்காவில் கடும் விவாதத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அமெரிக்க அதிபர் ட்ரம்ப், நியூயார்க் டைம்ஸ் கூறியிருப்பது முற்றிலும் பொய்யான செய்தி என மறுத்துள்ளார்.

தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிபர் ட்ரம்ப்க்கு இது இன்னொரு தலைவலியாக மாறியிருக்கிறது.