மிசோரமில் தொடர்ந்து 4 நாட்களாக நிலநடுக்கம் – 4.1 ரிக்டராக பதிவு

 

மிசோரமில் தொடர்ந்து 4 நாட்களாக நிலநடுக்கம் – 4.1 ரிக்டராக பதிவு

ஐஸ்வால்: மிசோரம் மாநிலத்தில் தொடர்ந்து 4-வது நாளாக நிலநடுக்கம் ஏற்பட்டது.

மிசோரம் மாநிலத்தில் தொடர்ந்து 4 நாட்களாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் இன்று காலை 4.1 ரிக்டர் அளவுக்கு கொஞ்சம் வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நேற்று 3.7 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. முன்னதாக கடந்த ஞாயிற்றுக் கிழமை 5.1 ரிக்டர் அளவிலும், திங்கள்கிழமை 5.3 ரிக்டர் அளவிலும் நிலநடுக்கம் பதிவானது.

மிசோரமில் தொடர்ந்து 4 நாட்களாக நிலநடுக்கம் – 4.1 ரிக்டராக பதிவு

இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சம்பாயில் உள்ள பல வீடுகள் மற்றும் கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இந்த நிலநடுக்கத்தால் பல இடங்களில் நெடுஞ்சாலைகள் மற்றும் சாலைகளில் விரிசல் ஏற்பட்டது. நிலநடுக்கம் ஏற்படும்போதெல்லாம் மக்கள் பீதியில் வீட்டை விட்டு ஓடி வந்து தெருக்களில் தஞ்சமடைவதும் பின்னர் சகஜ நிலைக்கு திரும்புவதுமாக மிசோரம் மாநிலத்தில் வாடிக்கையாக நடைபெற்று வருகிறது.