கொரோனாவுக்கு ஒரு லட்சம் பேரை இழந்த இன்னொரு நாடு!

 

கொரோனாவுக்கு ஒரு லட்சம் பேரை இழந்த இன்னொரு நாடு!

கொரோனா உலகம் முழுக்க ஒரே நேரத்தில் பயத்தைக் கொடுத்து வருகிறது. இப்படியொரு பேரிடர் இதற்கு முன் இருந்திருக்குமா என்பதே கேள்விக்குரியது. பல நாடுகளில் கொரோனாவின் இரண்டாம் அலை வீசி வருகிறது. அதனால், பாதிப்பு பல மடங்கு அதிகரித்து, இறப்புகளும் உயர்ந்து வருகின்றன.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 5 கோடியே 89 லட்சத்து 85 ஆயிரத்து 500 பேர். கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 4 கோடியே 07 லட்சத்து 66 ஆயிரத்து 904 நபர்கள். கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 13 லட்சத்து 93 ஆயிரத்து 671 பேர்.

கொரோனாவுக்கு ஒரு லட்சம் பேரை இழந்த இன்னொரு நாடு!

உலகம் முழுவதும் 10 லட்சம் கொரோனா பாதிப்புகளைக் கடந்த நாடுகள் 11. அவற்றில் மெக்சிகோவும் உண்டு.

மெக்சிகோவில் மொத்த பாதிப்பு 10,41,875 பேர். இவர்களில் 7,79,104 பேர் குணமடைந்துவிட்டனர். ஆனால், 1,01,676 பேர் மரணம் அடைந்தது பேரதிர்ச்சி தரும் செய்தியாகும்.

ஏனெனில், மெக்ஸிகோவின் தற்போது இறப்பு விகிதம் 12 சதவிகிதம். ஓரிரு மாதங்களுக்கு முன் 14 சதவிகிதமாக இருந்தது. உலகளவில் பார்த்தால், கொரோனா இறப்பு விகிதம் 3 சதவிகிதம்தான். இந்தியாவில் 2-க்கும் குறைவு. அதனால்தான் மெக்சிகோவின் இறப்பு எண்ணிக்கை அதிர்ச்சியை அளிக்கிறது.

கொரோனாவுக்கு ஒரு லட்சம் பேரை இழந்த இன்னொரு நாடு!

மெக்சிகோவில் ஒரேநாளில் அதிக மரணம் எனும் வகையில் பார்த்தால் ஜூன் மாதம் 04 -ம் தேதி 1,128 பேரும், ஜூன் 22-ம் தேதி 1,078 பேர் இறந்திருக்கிறார்கள். சமீபத்தில் எனும் பார்க்கையில் நவம்பர் 21-ம் தேதி 79 பேர் இறந்திருகிறார்கள்.

மெக்சிகோவில் நாள்தோறும் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளது. ஆகஸ்ட் 02-ம் தேதி ஒரே நாளில் 9,866 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. நேற்று (நவம்பர் 22) மட்டும் 6719 பேருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது.

கொரோனாவின் பாதிப்பு ஒருபக்கம் இருந்தாலும் கிறிஸ்துமஸை வரவேற்க, அந்நாட்டு மக்கள் தயராகி வருகிறார்கள். சில நாட்களாக பூக்கள் விறபனை சுமாராக இருந்த நிலையில் தற்போது விற்பனை வேகமெடுத்திருக்கிறது.