துபாயைத் தொடர்ந்து இந்திய விமானங்களுக்கு தடை விதித்த இன்னொரு நாடு

 

துபாயைத் தொடர்ந்து இந்திய விமானங்களுக்கு தடை விதித்த இன்னொரு நாடு

சீனாவின் வூகான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகமெங்கும் பரவ முக்கிய தடமாக இருந்தது விமான பயணங்களே. அதனால், ஒரு நாட்டில் கொரோனா பரவத் தொடங்கியதுமே விமானப் போக்குவரத்தை நிறுவத்துவது வழக்கமாக உள்ளது.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 3 கோடியே 12 லட்சத்து  39 ஆயிரத்து 588 பேர்.   கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 2 கோடியே 28 லட்சத்து 33 ஆயிரத்து 523 நபர்கள்.

துபாயைத் தொடர்ந்து இந்திய விமானங்களுக்கு தடை விதித்த இன்னொரு நாடு

கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 9 லட்சத்து 65 ஆயிரத்து 065 பேர்.  

உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா இரண்டாம் இடத்தில் இருந்தாலும், புதிய நோயாளிகள் அதிகரிப்பு, தினந்தோறும் இறப்பவர்களின் எண்ணிக்கை என கடந்த இரு வாரங்களாக உலகளவில் முதல் இடத்தில் உள்ளது.

அமெரிக்காவில் 33,344 பேரும், பிரேசிலில் 16,282 பேரும் புதிய நோயாளிகளாக அதிகரித்திருக்கிறார்கள். ஆனால், இந்தியாவில் 87,381 பேராக அதிகரித்துள்ளனர். நேற்று இறந்தோர் எண்ணிக்கையும் அமெரிக்கா, பிரேசில் நாடுகளை விடவும் இந்தியாவில் அதிகம்.

துபாயைத் தொடர்ந்து இந்திய விமானங்களுக்கு தடை விதித்த இன்னொரு நாடு

இதனால், இந்தியாவிலிருந்து செல்லும் பயணிகள் கொரோனா பரிசோதனைகளை முழுமையாகச் செய்தால் மட்டுமே மற்ற நாடுகளில் அனுமதிக்கப்படுகின்றன. இந்நிலையில் துபாய் சென்ற விமானத்தில் இந்தியர்கள் இருவருக்கு கொரோனா இருந்ததால் அந்த நாட்டு அரசு இந்திய விமானங்களுக்கு 15 நாட்கள் தடை விதித்தது.

துபாயைத் தொடர்ந்து இந்திய விமானங்களுக்கு தடை விதித்த இன்னொரு நாடு

இப்போது ஹாங்காங் நாட்டிலும் இந்திய விமானங்களுக்கும் தடை விதித்துள்ளது. அண்மையில் இந்தியாவிலிருந்து வந்த பயணிகளுக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பதைக் கண்டறிந்த ஹாங்காங் அரசு இந்த தடை உத்தரவை பிரப்பித்துள்ளது. இந்தத் தடை அடுத்த மாதம் 3-ம் தேதி வரை அமலில் இருக்குமாம்.

ஹாங்காங் நாட்டுக்குள் வருவோர் கொரோனா டெஸ்ட்டில் நெகட்டிவ் என்றால் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள்.