அமெரிக்காவில் இன்னொரு கொரோனா தடுப்பூசிக்கும் அனுமதி!

 

அமெரிக்காவில் இன்னொரு கொரோனா தடுப்பூசிக்கும் அனுமதி!

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 7 கோடியே 38 லட்சத்து 9 ஆயிரத்து 663 பேர். கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 5 கோடியே 18 லட்சத்து 19 ஆயிரத்து 551 நபர்கள்.

கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 16 லட்சத்து 41 ஆயிரத்து 741 பேர். தற்போது சிகிச்சை எடுத்துக்கொண்டிப்போர் 2,03,48,449 பேர்.

அமெரிக்காவில் இன்னொரு கொரோனா தடுப்பூசிக்கும் அனுமதி!

மற்ற அனைத்து நாடுகளை விடவும், கொரோன பாதிப்பு அமெரிக்காவின் உச்சத்தில் இருக்கிறது. எப்போதும் அதன் பரவல் குறையவே இல்லை. அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு 1,71,43,779. நேற்று மட்டுமே புதிய நோயாளிகளின் எண்ணிக்கை 1,99,875. இதுவரை 3 லட்சத்து 11 ஆயிரம் பேர் இறந்துவிட்டனர்.

இதனால், அமெரிக்காவில் உடனடியாக கொரோனா பரவலைத் தடுக்க ஃபைசர் கொரோனா தடுப்பு மருந்தை அவசரக் காலப் பயன்பாட்டுக்கு அனுமதி கொடுத்தது அமெரிக்கா. அதனால், இரண்டு நாட்களாக ஃபைசர் கொரோனா தடுப்பூசி அமெரிக்காவின் அனைத்து மாகாணங்களிலும் செலுத்தப்படுகின்றன. இதே மருந்து பிரிட்டனிலும் பொதுமக்களுக்குச் செலுத்த அந்த நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது.

அமெரிக்காவில் இன்னொரு கொரோனா தடுப்பூசிக்கும் அனுமதி!

இந்நிலையில் அமெரிக்காவின் மாடர்னா நிறுவனத்தில் கொரோனா தடுப்பூசி 94 சதவித பலன் அளிப்பதாகத் தகவல்கள் வெளியாகின. எனவே, அந்தத் தடுப்பு மருந்தையும் அமெரிக்கா தனது நாட்டில் அவசரக்கால பயன்பாட்டுக்கு அனுமதி அளித்துள்ளது. விரைவில் இந்தத் தடுப்பூசியும் அமெரிக்காவில் பயன்பாட்டுக்கு வரும் எனத் தெரிகிறது.

இந்த நடவடிக்கைகள் மூலம் அமெரிக்காவில் கொரோனா தொற்றின் எண்ணிக்கை குறையும் என நம்பப்படுகிறது.