உயிர் பயம்… காஷ்மீர் பா.ஜ.க-வில் இருந்து விலகும் தொண்டர்கள்

 

உயிர் பயம்… காஷ்மீர் பா.ஜ.க-வில் இருந்து விலகும் தொண்டர்கள்

காஷ்மீரில் தொடர்ந்து பா.ஜ.க தலைவர்கள் சுடப்படுவதைத் தொடர்ந்து அந்த கட்சியிலிருந்து தொண்டர்கள் பலரும் விலகத் தொடங்கியுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

உயிர் பயம்… காஷ்மீர் பா.ஜ.க-வில் இருந்து விலகும் தொண்டர்கள்
காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு, காஷ்மீர் இரண்டு யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து காஷ்மீரில் கடந்த ஓராண்டாக கடும் கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. தொடர்ந்து என்கவுண்டர்கள் செய்யப்பட்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு வருகின்றனர்.

உயிர் பயம்… காஷ்மீர் பா.ஜ.க-வில் இருந்து விலகும் தொண்டர்கள்
இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பா.ஜ.க தலைவர்கள் குறிவைத்துக் கொல்லப்படுகின்றனர். இதனால் தொண்டர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
காஷ்மீர் பள்ளத்தாக்கில் பா.ஜ.க தொண்டர்கள், நிர்வாகிகள் கட்சிப் பொறுப்பு, அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்ளிட்டவற்றில் இருந்து விலகிக் கொள்வதாக கடிதம் கொடுத்து வருகின்றனர். தங்களின் பாதுகாப்புக்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் கட்சியிலிருந்து விலகுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

உயிர் பயம்… காஷ்மீர் பா.ஜ.க-வில் இருந்து விலகும் தொண்டர்கள்
கடந்த மாதம் பா.ஜ.க பந்திபோரா முன்னாள் தலைவர் வாசிம் பாரி, அவரது தந்தை, சகோதரர்கள் கொல்லப்பட்டனர். கடந்த வாரம் பா.ஜ.க துணை செயலாளர் சஜாத் அகமது மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அதன் பிறகு நேற்று மாவட்ட தலைவர் அப்துல் ஹமீது நஜார் கொல்லப்பட்டார். தலைவர்களுக்கே பாதுகாப்பு இல்லாத நிலையில் தொண்டர்களுக்கு யார் பாதுகாப்பு வழங்குவார்கள் என்ற கேள்வியை அவர்கள் எழுப்புகின்றனர்.