சென்னையிலிருந்து மேலும் 229 டன் அம்மோனியம் நைட்ரேட் அகற்றப்பட்டது!

சென்னையிலிருந்து மேலும் 229 டன் அம்மோனியம் நைட்ரேட் அகற்றப்பட்டது!

லெபனான் நாட்டின் துறைமுகத்தில் 6 ஆண்டுகளாக வைத்திருந்த 2,750 டன் அமோனியம் நைட்ரேட் எனும் வேதிப்பொருள் வெடித்து 100 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சென்னையிலிருந்து மேலும் 229 டன் அம்மோனியம் நைட்ரேட் அகற்றப்பட்டது!

அதே சமயம் கரூர் நிறுவனத்தின் 740 மெட்ரிக் டன் அமோனியம் நைட்ரேட் 6 ஆண்டுகளுக்கு முன் பறிமுதல் செய்யப்பட்டு சென்னை துறைமுகத்தில் 6 ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக லெபனான் வெடிவிபத்து போல சென்னையிலும் ஏதேனும் ஆபத்து நேரிடுமோ என பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர் என பலர் கேள்வி எழுப்பி வந்தனர்.

சென்னையிலிருந்து மேலும் 229 டன் அம்மோனியம் நைட்ரேட் அகற்றப்பட்டது!

இந்நிலையில்  6 ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்டு வந்த 740 மெட்ரிக் டன் அமோனியம் நைட்ரேட் தற்போது பாதுகாப்பாக அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. சென்னையில் இருந்து 740 டன் அம்மோனியம் நைட்ரேட் 2ஆம் கட்டமாக 12 கண்டெய்னர் லாரிகள் மூலம் ஹைதராபாத் எடுத்துச் செல்லப்பட்டன. ஹைதராபாத் சால்வோ நிறுவனத்திற்கு சாலை மர்க்கமாக எடுத்துச் செல்லப்படுவதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.