‘மேலும் 14 மீனவர்கள் கைது’ தொடரும் இலங்கை கடற்படையின் அட்டூழியம்!

‘மேலும் 14 மீனவர்கள் கைது’ தொடரும் இலங்கை கடற்படையின் அட்டூழியம்!

நாகையில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் 14 பேர் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘மேலும் 14 மீனவர்கள் கைது’ தொடரும் இலங்கை கடற்படையின் அட்டூழியம்!

தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படை தாக்குதல் எல்லை மீறிக் கொண்டிருப்பதாக அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மீனவர்களை கத்தி முனையில் விரட்டி அடிப்பதும், படகுகளை சேதப்படுத்தி லட்சக் கணக்கில் மதிப்புள்ள பொருட்களை இலங்கை கடற்படை நாசமாக்குவதும் தொடர்கதையாகி வருகிறது. அண்மையில், ராமேஸ்வர மீனவர் ஒருவர் இலங்கை கடற்படையால் படுகாயம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

‘மேலும் 14 மீனவர்கள் கைது’ தொடரும் இலங்கை கடற்படையின் அட்டூழியம்!

இதை தொடர்ந்து, எல்லை மீறியதாக கூறி பறிமுதல் செய்யப்பட்ட 121 படகுகளை அழிக்க இலங்கை நீதிமன்றங்கள் பிறப்பித்த உத்தரவுக்கு கண்டனக்குரல்கள் எழுந்தன. இதை தொடர்ந்து நேற்று இரவு 4 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். இவ்வாறாக இலங்கை கடற்படையினரின் அட்டூழியம் அதிகரித்த வண்ணமே உள்ளது. இந்த நிலையில், நாகையில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மேலும் 14 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பருத்தித்துறை அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக அவர்களை கடற்படை கைது செய்துள்ளது.