ஆல்பாஸ் அறிவித்தும், கட்டணத்துடன் செமஸ்டர் தேர்வு… அதிர்ச்சியில் திருவள்ளுவர் பல்கலை. மாணவர்கள்…

 

ஆல்பாஸ் அறிவித்தும், கட்டணத்துடன் செமஸ்டர் தேர்வு… அதிர்ச்சியில் திருவள்ளுவர் பல்கலை. மாணவர்கள்…

திருப்பத்தூர்

திருப்பத்தூர் அடுத்த கதிரம்பட்டி பகுதியில் திருவள்ளுவர் பல்கலைக் கழகம் அமைந்துள்ளது. இங்கு பல்வேறு துறை சார்ந்த இளங்கலை மற்றும் முதுகலை பட்டயப் படிப்புகளில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பயின்று வருகின்றனர்.

கொரோனா தளர்வுகள் காரணமாக தற்போது மீண்டும் திருவள்ளுவர் பல்கலைக் கழகம் திறக்கப்பட்டுள்ள நிலையில், பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த கல்வியாளர்கள் கடந்த ஆண்டிற்கான 4-வது செமஸ்டர் கல்விக் கட்டணத்தை கட்டச்சொல்லி வற்புறுத்துவதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டில் படித்த மாணவர்கள், தங்களுடைய பட்டயப் படிப்பிற்கு ஏற்ற செமஸ்டர் கல்வி கட்டணத்தை கட்டிவிட்ட சூழ்நிலையில், கொரோனா காரணமாக தேர்வு நடைபெற வில்லை.

ஆல்பாஸ் அறிவித்தும், கட்டணத்துடன் செமஸ்டர் தேர்வு… அதிர்ச்சியில் திருவள்ளுவர் பல்கலை. மாணவர்கள்…

எனினும் தமிழக முதலமைச்சர் தேர்வு எழுதாவிட்டாலும் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இந்த நிலையில், மீண்டும் 4-வது செமஸ்டர் தேர்வை எழுதச் சொல்வதுடன், மீண்டும் கட்டணத்தை செலுத்த கூறியதால் அதிர்ச்சி அடைந்த 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இன்று பல்கலைக்கழக எதிரே திருப்பத்தூர் -பெங்களூரு நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால், அங்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உள்ளனர். இதனால், திருவள்ளுவர் பல்கலை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.