“விஜயகாந்த் முன்பு போல சுறுசுறுப்பாக இல்லை”… யாருடன் கூட்டணி என்பதை அடுத்த மாதம் அறிவிப்பார் : பிரேமலதா

“விஜயகாந்த் முன்பு போல சுறுசுறுப்பாக இல்லை”… யாருடன் கூட்டணி என்பதை அடுத்த மாதம் அறிவிப்பார் : பிரேமலதா

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரியில் விஜயகாந்த் அறிவிப்பார் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

“விஜயகாந்த் முன்பு போல சுறுசுறுப்பாக இல்லை”… யாருடன் கூட்டணி என்பதை அடுத்த மாதம் அறிவிப்பார் : பிரேமலதா

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கட்சியில் பொருளாளர் பிரேலதா, சுதீஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் தேர்தல் கூட்டணி மற்றும் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

“விஜயகாந்த் முன்பு போல சுறுசுறுப்பாக இல்லை”… யாருடன் கூட்டணி என்பதை அடுத்த மாதம் அறிவிப்பார் : பிரேமலதா

இந்நிலையில் தேமுதிக பொருளாளர் பிரேலதா விஜயகாந்த் செய்தியாளர்கள் மத்தியில் பேசும் போது, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்தது. சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரியில் விஜயகாந்த் அறிவிப்பார். எம்.ஜி.ஆருக்கு பிறகு ஒரு புரட்சி தலைவர் என்றால் அது கேப்டன் தான்; மக்கள் நல்ல முடிவை எடுக்க வேண்டும்; கேப்டன் பிரச்சாரம் செய்வது குறித்து பின்னர் அறிவிக்கப்படும். கேப்டன் விஜயகாந்த் முன்பு போல சுறுசுறுப்பாக இல்லை. ஆனாலும் அவர் பிரச்சாரத்தில் பங்கேற்பார் என்றார்.

அத்துடன் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் 7 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. பெட்ரோல் டீசல் விலையை உடனடியாக குறைக்க வேண்டும், அதிமுக அரசு வாக்குறுதி அளித்தபடி டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.