புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது : சபாநாயகர் அறிவிப்பு!

 

புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது : சபாநாயகர் அறிவிப்பு!

புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்தது என சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்துள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார் முதல்வர் நாராயணசாமி.இந்நிலையில் புதுச்சேரி சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் நாராயணசாமி, “மக்களுக்காக தொடர்ந்து பல நல திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.புதுச்சேரி மாநில மக்கள் காங்கிரஸ் ஆட்சி மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள். பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களில் 95% நிறைவேற்றியுள்ளோம். மத்திய அரசிடம் இருந்து புதுச்சேரி மாநிலத்திற்கு போதிய நிதி கிடைக்கவில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை மத்திய அரசு வஞ்சிக்கிறது”என்றார்.

புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது : சபாநாயகர் அறிவிப்பு!

“மத்திய அரசு புதுச்சேரி மாநிலத்தை தொடர்ந்து புறக்கணித்து வந்தது . 4 ஆண்டுகளுக்கு புதிய தொழிற்சாலைகளுக்கு அனுமதி தரப்படவில்லை; எதற்கெடுத்தாலும் அமலாக்கத்துறை, சிபிஐ-ஐ ஏவுகிறது மத்திய அரசு . மத்திய அரசின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதம்தான். ஆனால் புதுச்சேரியின் பொருளாதார வளர்ச்சி 10.20 சதவீதம் . மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு மரியாதை வேண்டும்; மக்களால் புறக்கணிக்கப்பட்டவர்கள் அனைவரும் இணைந்து ஆட்சியைக் கவிழ்க்க முயற்சிக்கின்றனர்.மத்திய பாஜக அரசு எப்படி ஆட்சியை கவிழ்ப்பார்கள் என்பது எனக்கு தெரியும்” என்றார்.

புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது : சபாநாயகர் அறிவிப்பு!

தொடர்ந்து மத்திய அரசை குறைக்கூறி பேசிய முதல்வர் நாராயணசாமி பேச்சுக்கு அதிமுக உறுப்பினர் அன்பழகன் எதிர்ப்பு தெரிவித்தார். சட்டப்பேரவையில் முதல்வர் பேசி வருகையில் தற்போது எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். நியமன உறுப்பினர்களுக்கு வாக்களிக்கும் உரிமை இல்லை என்ற காங்கிரஸ் எம்எல்ஏக்களின் கூற்றுக்கு எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுப்பட்டனர்.

இந்நிலையில் புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்ததாக சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்தார். காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு பெரும்பான்மை இல்லை என முடிவான நிலையில் முதல்வர் நாராயணசாமி சட்டப்பேரவையிலிருந்து வெளியேறினார்.