மார்ச் மாதம் முதல் வாரத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு?!

 

மார்ச் மாதம் முதல் வாரத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு?!

அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என அமைச்சர் சி.வி சண்முகம் தெரிவித்துள்ளார்.

அரசியலில் பெரும்பாங்காற்றிய ஜெயலலிதாவும், கருணாநிதியும் இல்லாத முதல் சட்டமன்றத் தேர்தலை தமிழகம் அடுத்த ஆண்டு எதிர்கொள்ளவிருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே எஞ்சியுள்ள நிலையில், பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுக தேர்தல் பணிகளில் முழுக்கவனம் செலுத்தி வருகின்றன. அந்த வகையில் தமிழக தேர்தல் ஆணையமும் வாக்காளர் பட்டியலை தயார் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

மார்ச் மாதம் முதல் வாரத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு?!

அரியணை ஏறப்போவது திமுகவா? அதிமுகவா? என தமிழக மக்கள் சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கும் இந்த சூழலில், மார்ச் மாதம் முதல் வாரத்தில் சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப் படலாம் என அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்துள்ளார்.

மார்ச் மாதம் முதல் வாரத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு?!

விழுப்புரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், மக்கள் தேர்தலுக்கு தயாராக இருக்க வேண்டும். மார்ச் மாதத்தில் தேதி அறிவிக்கப்படலாம். அதிமுகவை பொறுத்தவரை தொண்டர்கள் கூட முதல்வராக முடியும், ஆணவம் கொண்டால் பதவியும் பறிக்கப்படும் என தெரிவித்தார்.