மின்சாரம் தாக்கி பலியானவர்களின் 8 குடும்பங்களுக்கு நிதியுதவி அறிவிப்பு!

 

மின்சாரம் தாக்கி பலியானவர்களின் 8 குடும்பங்களுக்கு நிதியுதவி அறிவிப்பு!

மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் பழனிசாமி நிதியுதவி அறிவித்துள்ளார்.

மின்சாரம் தாக்கி பலியானவர்களின் 8 குடும்பங்களுக்கு நிதியுதவி அறிவிப்பு!

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு தோட்டத்தில் அபிராமி என்பவரின் கணவர் பாலமுருகன் என்பவர் விவசாய நிலத்தில் நீர் பாய்ச்சும் போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும், கோவில்பட்டி வட்டம் சுப்ரமணியம் புரத்தை சேர்ந்த பாண்டி என்பவரின் மகன் சிறுவன் சந்தியாகு விளையாடிக் கொண்டிருந்தபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும், புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி வட்டம் தென் மறையூர் பகுதியை சேர்ந்த ராமன் என்பவரின் மகன் கருப்பையா என்பவர் எதிர்பாராதவிதமாக விவசாய நிலத்தில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும், திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டம் அண்ணாமலைச்சேரி கிராமத்தை சேர்ந்த தாஸ் என்பவரின் மகன் சிறுவன் சுரேன் என்பவர் விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் செய்தியையும்,

மின்சாரம் தாக்கி பலியானவர்களின் 8 குடும்பங்களுக்கு நிதியுதவி அறிவிப்பு!

கன்னியாகுமரி மாவட்டம் மிடாலம் கிராமத்தை சேர்ந்த லூயிஸ் மார்ட்டின் என்பவரின் மகன் ஜெய சேகர் என்பவர் கட்டட பணியின் போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும் , சென்னை மாவட்டம் திருவொற்றியூரை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரின் மகன் சுரேன் என்பவர் லாரியில் மூட்டைகளை ஏற்றும் பணியின் போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும் , சோழிங்கநல்லூர் பள்ளிக்கரணை கிராமத்தை சேர்ந்த செல்வகுமார் என்பவரின் மகன் பாபு என்பவர் எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும், விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை வட்டம்பலம் கிராமத்தை சேர்ந்த காளை பாண்டியன் என்பவரின் மகன் சரவணன் என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்ற போது எதிர்பாராத விதமாக மின் கம்பி அறுந்து விழுந்து மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.

https://twitter.com/TNGOVDIPR/status/1325361736875012099

மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேற்கண்ட துயர சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 3 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.