பழனி கோயிலில் மீண்டும் அன்னதானம்!

 

பழனி கோயிலில் மீண்டும் அன்னதானம்!

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி திருக்கோயில் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது. கொரோனா காரணமாக கடந்த 5 மாதங்களாக தமிழகம் முழுவதும் வழிபாட்டுத்தலங்கள் மூடப்பட்டிருந்த நிலையில் கடந்த 1 ஆம் தேதி முதல் கோயில்கள் திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள் .

பழனி கோயிலில் மீண்டும் அன்னதானம்!

அந்த வகையில் பழனி திருக்கோவிலில் ஆன்லைனில் முன்பதிவு செய்து அதற்கான அத்தாட்சி உடன் வந்தால் மட்டுமே கோயிலுக்குள் அனுமதி வழங்கப்படும் என கோவில் நிர்வாகம் அறிவித்தது.

பழனி கோயிலில் மீண்டும் அன்னதானம்!

இந்நிலையில் பழனி முருகன் கோவிலில் கொரோனாவால் நிறுத்தப்பட்ட அன்னதான திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படுகிறது. நாளொன்றுக்கு ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் பொட்டலமாக வழங்கப்பட்டு வந்த நிலையில் பக்தர்களின் வருகையை பொறுத்து அன்னதானம் வழங்கப்படும் என்றும் தெரிகிறது.