என்னை பற்றி நூல் வெளியிடுகிறேன்.. எல்லாவற்றையும் அதில் தெரிந்து கொள்ளுங்கள்: அண்ணாமலை

 

என்னை பற்றி நூல் வெளியிடுகிறேன்.. எல்லாவற்றையும் அதில் தெரிந்து கொள்ளுங்கள்: அண்ணாமலை

தமிழகத்தை சேர்ந்தவர் அண்ணாமலை. கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றி வந்த இவர், கரூர் மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர். கடந்த 2011 ஆம் ஆண்டில் கர்நாடக மாநில பேட்ஜ் ஐபிஎஸ் அதிகாரியாக பணியில் சேர்ந்தார் அண்ணாமலை. இதனையடுத்து இரண்டே ஆண்டுகளில் கட்கலா துணை பிரிவின் எஸ்பி ஆக பணியாற்றினார்.

என்னை பற்றி நூல் வெளியிடுகிறேன்.. எல்லாவற்றையும் அதில் தெரிந்து கொள்ளுங்கள்: அண்ணாமலை

தொடர்ந்து சில மாவட்டங்களில் தனது காவல்துறை பணியை தொடர்ந்த அண்ணாமலை, தனது பதவியை துறந்து சமீபத்தில் பா.ஜ.க.வில் இணைந்தார். அண்ணாமலைக்கு பாஜக மாநில துணைத் தலைவர் பதவியை வழங்கியுள்ளது.

இந்நிலையில் அண்ணாமலை, தனது ட்விட்டர் பக்கத்தில் சிவில் சர்வீஸ்க்கான நேர்க்காணலை 2010-11 இல் சந்தித்தாகவும், பயிற்சியை மைசூரில் தொடங்கியதாகவும் தன்னை பற்றிய சிறுக்குறிப்பை பகிர்ந்துள்ளார். அதில், 4 நாட்கள் மட்டுமே தாம் பாஜகவுடன் இணைந்து பயணித்திருப்பதாகவும், 6 ஆண்டுகள் காங்கிரஸ் உடனும், ஒரு ஆண்டு ஐக்கிய ஜனதா தள கட்சியுடனும் தனது சேவைக்காக பயணித்ததாக குறிப்பிட்டுள்ளார். ஐபிஎஸ் தேர்வுக்கான பயிற்சிக்காக எந்தவொரு கட்சி அல்லது அமைப்பை சேர்ந்த அகடாமிக்குn சென்றதில்லை எனக்கூறியுள்ள அண்ணாமலை சொந்த முயற்சியிலேயே தேர்வுக்கு பயின்றதாகவும், ஆனால் பல விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதாகவும் வேதனை தெரிவித்துள்ளார். தன் வாழ்க்கை பற்றிய முழு தகவலையும் அறிந்துக்கொள்ள நூல் வெளியிடுகிறேன் என்று சுட்டிக்காட்டியுள்ள அண்ணாமலை எல்லாவற்றையும் அதில் தெரிந்து கொள்ளுங்கள் என தெரிவித்துள்ளார்.