கூட்டணிக்குள் குழப்பம் ஏற்படுத்த முயற்சி! அண்ணாமலையின் திடீர் அறிக்கை

 

கூட்டணிக்குள் குழப்பம் ஏற்படுத்த முயற்சி! அண்ணாமலையின் திடீர் அறிக்கை

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் வேளாண் சட்ட நன்மைகள் குறித்து மக்கள் மத்தியில் பேசிய தமிழக பாஜக துணை தலைவர் அண்ணாமலை, ” தமிழக மக்களிடமிருந்து கொள்ளையடித்த பணத்தை தேர்தல் நேரத்தில் ரூ. 2000 ஆக தருவதுதான் தமிழக அரசியல். 2 ஆயிரத்தை நம்பி 5 ஆண்டுகளை தமிழக மக்கள் அடகு வைத்து விடக்கூடாது. பாஜகவுக்கு மக்கள் வாக்களிக்கவில்லை எனில் காரின் டயரில் விழுந்து கும்பிடுபவர்கள் தான் அரசியல்வாதியாக வருவர் ” என்று விமர்சித்திருந்தார். இதையடுத்து அண்ணாமலை தமிழக அரசின் பொங்கல் பரிசு குறித்தது தான் விமர்சிப்பதாக தகவல் வெளியாகின.

கூட்டணிக்குள் குழப்பம் ஏற்படுத்த முயற்சி! அண்ணாமலையின் திடீர் அறிக்கை

இந்நிலையில் பாஜக மாநில துணை தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த மூன்று நாட்களாக தமிழகத்தின் ஒரு கட்சியை சார்ந்த ஊடகங்கள் நான் பேசிய அனைத்து விஷயங்களையும் திரித்து சமூக தளத்தில் நமது கூட்டணிக்குள் குழப்பம் ஏற்படுத்த சட்டத்திற்குப் புறம்பான செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். என்னைப் பொருத்தவரை ஜனநாயகத்தில் ஊடகத்தின் முக்கியமான வேலை என்று ஒன்று இருக்கிறது. அது மக்களுக்கு உண்மையை உள்ளவாறு எடுத்துரைத்து சரியான நேரத்தில் அதை கொண்டு சேர்ப்பது.

கூட்டணிக்குள் குழப்பம் ஏற்படுத்த முயற்சி! அண்ணாமலையின் திடீர் அறிக்கை

தமிழக ஊடகங்கள் இதுவரை அதை சரியாக செய்து வந்தன. இப்பொழுதுதான் அவர்களில் சிலர் சில காலமாக இப்படி தர்மத்திற்கு எதிராக வேலை செய்து வருகிறார்கள். அதனால் நாளை முதல் நான் கலந்து கொள்ளும் அனைத்து ஊடக நிகழ்ச்சிகளும் என்னுடைய முகநூல் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் நேரடி ஒளிபரப்பில் வரும் நம்முடைய நண்பர்களும் உண்மையை மட்டுமே விரும்பும் தமிழர்கள் அனைவரும் பொது மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் நான் தரும் பேட்டிகளை என்னுடைய முகநூல் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் நேரடி ஒளிபரப்பு பதவியோ பார்த்துக்கொள்ளலாம்.

சீப்பை ஒளித்து விட்டு கல்யாணத்தை நிறுத்த கயவர்கள் சிலர் முயற்சிப்பதை போல வார்த்தைகளை திரித்து கூட்டணி குழப்பத்தை ஏற்படுத்த முயல்பவர்கள் தோற்கடிக்கப்படுவார்கள். சத்தியம் வெல்லும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.