“ஊடகங்களை மிரட்டிய அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும்”

 

“ஊடகங்களை மிரட்டிய அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும்”

ஊடகங்களை மிரட்டிய அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

“ஊடகங்களை மிரட்டிய அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும்”

தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழக பாஜக தலைவராக இருந்த எல் . முருகன் மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்ற நிலையில் அந்த பதவிக்கு அண்ணாமலை தேர்வு செய்யப்பட்டுள்ளார். அந்த வகையில் கோவையில் பதவியேற்பு விழாவிற்கு கடந்த 14ஆம் தேதி புறப்பட்ட அண்ணாமலைக்கு வழிநெடுகிலும் வரவேற்பு கிட்டியது. அப்போது நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர் , பாஜக பற்றி ஊடகங்களில் வரும் செய்திகளை கண்டுகொள்ள வேண்டாம் . பாஜக குறித்த தவறான செய்திகளைப் பரப்புகின்றனர். தகவல் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சராக எல்.முருகன் பதவி ஏற்றுள்ளார். இன்னும் 6 மாதத்தில் அனைத்து ஊடகங்களையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவோம். இனி தவறான செய்திகளை அவர்கள் எவ்வாறு கூறுகிறார்கள் என்பதை பார்த்துவிடுவோம். பொய் செய்திகளை வைத்து அரசியல் செய்ய முடியாது என்று தெரிவித்தார். அண்ணாமலையின் பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் ஊடகங்களை எங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவோம் என மிரட்டியுள்ள அண்ணாமலை மன்னிப்பு கேட்கவேண்டும் என்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்க பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சன்யா வலியுறுத்தியுள்ளார் . இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் எல்.முருகனை வைத்து அனைத்து ஊடகங்களையும் ஆறே மாதத்திற்குள் எங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவோம் என மிரட்டியுள்ள அண்ணாமலை மன்னிப்பு கேட்கவேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.