அதிமுகவுடன் கூட்டணியா? தனித்து போட்டியா? – அண்ணாமலையின் நச் பதில்!

 

அதிமுகவுடன் கூட்டணியா? தனித்து போட்டியா? – அண்ணாமலையின் நச் பதில்!

தமிழ்நாட்டில் ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, தென்காசி, திருநெல்வேலி, விழுப்புரம், வேலூர், காஞ்சிபுரம் ஆகிய விடுபட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தும் பணிகளை மாநில தேர்தல் ஆணையம் முடுக்கி விட்டுள்ளது. அதன்படி அக்டோபர் 6, அக்டோபர் 9 என இரு கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியிருக்கிறது. தேர்தல் ஆணையம் ஒருபுறம் வேலை பார்த்துக் கொண்டிருக்க அரசியல் கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்தி வருகின்றன.

அதிமுகவுடன் கூட்டணியா? தனித்து போட்டியா? – அண்ணாமலையின் நச் பதில்!

ஆளுங்கட்சியான திமுக அனைத்துக் கூட்டணி கட்சிகளுக்கும் இன்று அழைப்பு விடுத்துள்ளது. இக்கூட்டத்திற்குப் பின்பு முடிவு என்னவென்று தெரியவரும். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமக தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. இது மற்ற கூட்டணிக் கட்சிகளைக் கலக்கமடைய வைத்துள்ளது. பாமகவை விமர்சித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பாமக ஜென்டில்மேனாக நடந்துகொண்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை; எங்களை விமர்சித்தால் நாங்கள் பதிலடி கொடுப்போம்; கூட்டணியிலிருந்து விலகியதால் எந்த இழப்பும் இல்லை என்று கூறினார்.

அதிமுகவுடன் கூட்டணியா? தனித்து போட்டியா? – அண்ணாமலையின் நச் பதில்!

ஆனால் பாமக செய்தித்தொடர்பாளர் பாலுவோ, போட்டியிடும் இடங்கள் குறித்து பேச கால அவகாசம் இல்லாமல் போனதாலேயே தனித்துப் போட்டியிடுவதாகக் கூறினார். பாமக தேசிய ஜனநாயகக் கூட்டணில் தான் நீடிக்கும் என்றும் அவர் தெரிவித்தார். இச்சூழலில் பாஜகவின் நிலைப்பாடு குறித்து அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலையிடம் கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அண்ணமலை, “அது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்துவிட்டு இரு தினங்களில் கூட்டணியா அல்லது தனித்து போட்டியா என்பது பற்றி அறிவிக்கப்படும்” என்றார்.