சிவசங்கர் பாபாவின் சொத்துகளை அபகரித்தாரா பாஜக நிர்வாகி கே.டி.ராகவன்? – அண்ணாமலை பரபர விளக்கம்!

சிவசங்கர் பாபாவின் சொத்துகளை அபகரித்தாரா பாஜக நிர்வாகி கே.டி.ராகவன்? – அண்ணாமலை பரபர விளக்கம்!

செங்கல்பட்டிலுள்ள சுஷில்ஹரி சர்வதேச பள்ளி நிறுவனரான சிவசங்கர் பாபா மாணவிகளைப் பாலியல் வன்கொடுமை செய்த விவகாரத்தில் கைதாகி சிறையில் இருக்கிறார். அவருக்கு உடந்தையாக இருந்தவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவரிடம் விசாரணை நடந்துவரும் நிலையில், நீதிமன்றத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சிவசங்கர் பாபாவின் தீவிர பக்தரும், சிவசங்கர் பாபா அறநெறி இயக்கத்தின் தலைவருமான நடிகர் சண்முகராஜா பாபா அப்படி செய்பவர் அல்ல என்றும், அவர் நல்லவர் என்றும் ஆதரித்து பேசினார்.

சிவசங்கர் பாபாவின் சொத்துகளை அபகரித்தாரா பாஜக நிர்வாகி கே.டி.ராகவன்? – அண்ணாமலை பரபர விளக்கம்!

இச்சூழலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சிவசங்கர் பாபா நிறுவனங்கலை நிர்வாகிக்கும் ஜானகி மீதும், பாஜக மாநில பொதுச் செயலாளரான கே.டி.ராகவன் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுக்களைச் சுமத்தினார். அப்போது பேசிய சண்முகராஜா, “சிவசங்கர் பாபாவின் நிறுவனமான சம்ரட்சணாவின் நிர்வாகப் பொறுப்பில் இருக்கும், சாதிய மனோபாவத்துடன் நடந்து கொள்கிறார். 20 ஆண்டுகளாக சிவசங்கர் பாபாவின் பக்தர்களாக இருக்கும் அடித்தட்டு மக்களை விரட்டி அடிக்கிறார். மடத்துக்குள் உயர்சாதியினர் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.

சிவசங்கர் பாபாவின் சொத்துகளை அபகரித்தாரா பாஜக நிர்வாகி கே.டி.ராகவன்? – அண்ணாமலை பரபர விளக்கம்!
அட்மின் ஜானகி

சுஷீல்ஹரி பள்ளியில் படிக்கும் சாதாரண மாணவர்களுக்கு மாற்றுச்சான்றிதழ் கொடுத்து வீட்டுக்கு அனுப்பி வருகிறார். அனைத்திலும் ஊழல் செய்து வருகிறார். இதற்கு கே.டி.ராகவனும் உடந்தை. அவரது அடியாட்கள் 30-க்கும் மேற்பட்டோர் ஆசிரமத்தில் தங்கி இருந்து அங்கும் வரும் பக்தர்களை மிரட்டியும் விரட்டியும் வருகின்றனர். சிவசங்கர் பாபா சிறையில் இருப்பதை வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு அவரது பிராமணர் அல்லாத பக்தர்களை உள்ளே அனுமதிக்காமல் பிரசாதம் செய்த கோவில்களை அபகரிக்க ஜானகி முயற்சி செய்கிறார்.

சிவசங்கர் பாபாவின் சொத்துகளை அபகரித்தாரா பாஜக நிர்வாகி கே.டி.ராகவன்? – அண்ணாமலை பரபர விளக்கம்!

பிற சாதியின் கோயில் கதவுகளை உடைத்து அத்துமீறி உள்ளே நுழைந்துள்ளனர். குகை நமச்சிவாயர் கோயில் கதவை உடைத்ததை எதிர்த்துக்கேட்ட பெண்ணை தாக்கியுள்ளனர். அனைத்தும் ஜானகிக்கு தெரியும், எனவே அவரை அழைத்து விசாரித்தால் பல திருப்பங்கள் உருவாகும்” என்றார். கே.டி.ராகவன் மீதான குற்றச்சாட்டில் எந்தவிதமான முகாந்திரமும் இல்லை என்றார். இது தொடர்பாக அவர் சட்டப்பூர்வமான நடவடிக்கையை மேற்கொள்வார் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.