‘திமுகவுக்கு பாஜகதான் எதிரி’ – அண்ணாமலை அதிரடி பேட்டி!

 

‘திமுகவுக்கு பாஜகதான் எதிரி’ – அண்ணாமலை அதிரடி பேட்டி!

திமுகவிற்கு பாஜகதான் எதிரி என்கிற அடிப்படையில் அரசியல் களம் நகர்வதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

மதுரை ஆத்திகுளம் பகுதியில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, பதவியேற்ற பிறகு தொண்டர்களையும் நிர்வாகிகளையும் சந்தித்து வருகிறேன். அரசியல் கூட்டங்கள் நடத்த அனுமதி இல்லாததால் உள்ளரங்க கூட்டங்களை நடத்த உள்ளோம். திமுக ஆட்சியின் தவறை சுட்டிக் காட்டுவோம் அப்போது மக்கள் பாஜக பக்கம் வருவார்கள். பிரதமர் மோடியின் நலத்திட்டங்களால் தமிழகத்தில் 3 கோடி பேர் பயனடைந்துள்ளதால் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என்று கூறினார்.

‘திமுகவுக்கு பாஜகதான் எதிரி’ – அண்ணாமலை அதிரடி பேட்டி!

தொடர்ந்து பேசிய அவர், யாருடைய பேச்சையும் ஒட்டுக்கேட்பது பாஜக அல்ல. மத்திய பாஜக அரசு ஓட்டு கேட்பதாக குற்றம்சாட்டுகிறார்கள். பெகாசஸ் மூலம் ஒட்டு கேட்கப்பட்டதாக கூறப்படுவது உண்மையல்ல. அரசியல் காரணத்திற்காகவே இந்த விவகாரம் பேசப்படுகிறது. தனி சுதந்திரத்தை காக்கும் கட்சியே பாஜக என்று தெரிவித்தார். மேலும், தற்போதைய நிலையில் திமுகவுக்கு பாஜகதான் எதிரி என்கிற நிலையில் தமிழக அரசியல் களம் நகர்வதாகவும் அவர் கூறினார்.