பாஜக பொங்கல் விழா வாக்குக்காக நடத்தவில்லை- அண்ணாமலை

 

பாஜக பொங்கல் விழா வாக்குக்காக நடத்தவில்லை- அண்ணாமலை

கோவையில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்ட பா.ஜ.க துணை தலைவர் அண்ணாமலை, “தமிழகம் முழுவதும் பா.ஜ.க சார்பில் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. நம்ம ஊர் பொங்கல் மூலம் மக்கள் மத்தியில் எழுச்சி எழுந்துள்ளது. பொங்கல் குறித்து அடுத்த தலைமுறைக்கு காட்ட நிறைய பேர் இந்த விழாவிற்கு அழைத்து வருகின்றனர். இந்த பொங்கல் விழா ஓட்டுக்காக செய்யவில்லை. தமிழக கலாச்சாரத்தை மீட்டெடுக்க வேண்டும் என்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 2011ல் காங்கிரஸ் ஆட்சியில் ஜல்லிகட்டுக்கு தடை ஏற்படுத்தி குழுப்பம் ஏற்படுத்தப்பட்டது. ராகுல் இதை உணர்ந்தாரா என்பது தெரியவில்லை. கிராம புறத்தில் காளைகள் இல்லாத நிலை ஏற்பட நிலையில் இப்போதுதான் மீண்டும் காளைகள் வர துவங்கி இருக்கின்றது

பாஜக பொங்கல் விழா வாக்குக்காக நடத்தவில்லை- அண்ணாமலை

விவசயத்தை பற்றி எதுவும் தெரியாத உதயநிதியுடன் சேர்ந்து கொண்டு ராகுல்காந்தி, பா.ஜ.க தான் தமிழர் கலாச்சாரத்தை அழிக்கின்றது என்கின்றார். இதற்கு என்ன ஆதாரம் இருக்கின்றது? 2011ல் காங்கிரஸ் கட்சி செய்தது தவறு என்பதை ராகுல்காந்தி உணர்ந்தாரா? பா.ஜ.க அதிமுகவுடன் கூட்டணியில் இருக்கின்றோம். குருமூர்த்தி பேசியது அவரது தனிப்பட்ட கருத்து. பெண்களை பற்றி யார் தவறாக பேசினாலும் தவறு. சூலூர் தொகுதியில் கட்சியை வலுப்படுத்த முயற்சி மேற்கொண்டு இருக்கின்றோம்” எனக் கூறினார்.