திருநீரை கீழே கொட்டிய ஸ்டாலின்… அது என்ன டால்கம் பவுடரா? அண்ணாமலை கேள்வி

 

திருநீரை கீழே கொட்டிய ஸ்டாலின்… அது என்ன டால்கம் பவுடரா? அண்ணாமலை கேள்வி

தேவர் ஜெயந்தியையொட்டில் முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்த சென்ற ஸ்டாலினுக்கு எதிராக கோ பேக் ஸ்டாலின் என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாக்கினர். தற்போது மீண்டும் ஒரு பிரச்னை கிளம்பியுள்ளது. அதாவது ஸ்டாலினுக்கு அங்கு விபூதி அளிக்கப்பட்டது. அதை நெற்றியில் ஸ்டாலின் பூசாமல் பெயரளவில் கழுத்தில் தடவிக் கொண்ட அவர், மீதமிருந்த விபூதியை கீழே கொட்டிவிட்டதாக கூறப்படுகிறது. ஸ்டாலின் விபூதியை கீழே கொட்டும் வீடியோவையும் இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. தேவரை அவமதித்த ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று இந்து அமைப்புகள் வலியுறுத்திவருகின்றன.

திருநீரை கீழே கொட்டிய ஸ்டாலின்… அது என்ன டால்கம் பவுடரா? அண்ணாமலை கேள்வி

இந்நிலையில் கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில துணைத் தலைவர் அண்ணாமலை, “தேவர் ஜெயந்திக்கு மு.க. ஸ்டாலின் அரசியல் செய்வதற்காக சென்றார். தேவர் நினைவிடத்தில் வழங்கப்பட்ட திருநீரை டால்கம் பவடர் போல தரையில் போட்டது கண்டனத்துக்குரியது. இதற்காக ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும். 7.5 சத இட ஒதுக்கீட்டில் பாஜக, ஆளுநர் மாளிகை இடையே எந்த பிரச்னையும் இல்லை. வேல் யாத்திரைக்கான நாள்கள் முருகன் காலண்டரை பயன்படுத்தி, முருகப் பெருமாள் விஷேச தினங்களை மையப்படுத்தியே திட்டமிடப்பட்டுள்ளது” எனக் கூறினார்.