மேகதாதுவில் ஒரு செங்கல் கூட வைக்க பாஜக அனுமதிக்காது- அண்ணாமலை

 

மேகதாதுவில் ஒரு செங்கல் கூட வைக்க பாஜக அனுமதிக்காது- அண்ணாமலை

மேகதாது விவகாரத்தில் கர்நாடக அரசை கண்டித்து ஆகஸ்ட் 5ம் தேதி காலை 9 மணிக்கு தஞ்சாவூரில் தமிழ்நாடு பாஜக சார்பில் உண்ணாவிரதம் நடத்தப்படும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

மேகதாதுவில் ஒரு செங்கல் கூட வைக்க பாஜக அனுமதிக்காது- அண்ணாமலை

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோவிலில் சாமி தரிசனம் செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை, சீன எல்லை உட்பட பல இடங்களிலும் பிரதமர் திருக்குறளை எடுத்துக்காட்டு கூறி பேசியிருக்கிறார். அதனால் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியது போல் நிச்சயமாக திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும். மேகதாது விவகாரத்தில் கர்நாடக அரசை கண்டித்து ஆகஸ்ட் 5ம் தேதி காலை 9 மணிக்கு தஞ்சாவூரில் தமிழ்நாடு பாஜக சார்பில் உண்ணாவிரதம் நடத்தப்படும். மேகதாதுவில் ஒரு செங்கல் கூட வைக்க தமிழக பாஜக அனுமதிக்காது.

அதிமுக கூட்டணியில் குழப்பம் இல்லை. உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுக உடன் கூட்டணி தொடரும். அதிமுக பொது பொதுக்குழு கூடி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர்கள்தான் தற்போது வரை அதிமுகவில் உள்ளனர். அதிமுகவில் ஒற்றை தலைமை என்னும் யூகத்திற்கு பதில் அளிக்க முடியாது. நாங்கள் தனிக்கட்சி, அதிமுக தனிகட்சி. அவர்களது கட்சி விவகாரத்தில் நாங்கள் கருத்து கூற முடியாது. திமுக தேர்தல் அறிக்கையில் கூறியது போன்று மீனவர்களுக்கு செய்ய வேண்டியவற்றை செய்யாததால் தமிழக அரசை கண்டித்து நாளை பாஜக போராட்டத்தில் குதிக்கவுள்ளது.