ஓபிஎஸ், ஈபிஎஸ் உடன் அண்ணாமலை திடீர் சந்திப்பு

 

ஓபிஎஸ், ஈபிஎஸ் உடன் அண்ணாமலை திடீர் சந்திப்பு

சென்னையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சி துணை தலைவர் ஓ பன்னீர்செல்வத்துடன் அண்ணாமலை சந்தித்து பேசினார்.

ஓபிஎஸ், ஈபிஎஸ் உடன் அண்ணாமலை திடீர் சந்திப்பு

தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்ற நிலையில் மரியாதை நிமித்தமாக ஈபிஎஸ்- ஓபிஎஸ்-ஐ சந்தித்த அண்ணாமலை அவர்களிடம், வாழ்த்து பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சந்திப்பு சென்னை கிரீன்வேஸ் சாலையிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் நடந்தது. தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்ற பின் முதன்முறையாக கூட்டணி கட்சி தலைவர்களை அண்ணாமலை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகனுக்கு மத்திய இணை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டதையடுத்து தமிழக பாஜக தலைவராக அண்ணாமலையை பாஜக தலைமை நியமித்தது. இதனையடுத்து அவர் கடந்த 16 ஆம் தேதி சென்னை தியாகராயநகரில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பாஜக மாநில தலைவராக பதவியேற்றுக்கொண்டார்.