“இதெல்லாம் சரியா படல” – முதல்வரிடம் பிடிஆர் மீது பிராது கொடுத்த அண்ணாமலை!

 

“இதெல்லாம் சரியா படல” – முதல்வரிடம் பிடிஆர் மீது பிராது கொடுத்த அண்ணாமலை!

மக்களுக்கு ரெஸ்டே விடாமல் தமிழக அரசியலில் புது புது பூகம்பங்கள் தினமும் எழுந்து வருகின்றன. சமீபத்திய பூகம்பத்தைக் கிளப்பியது நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன். கடந்த 17ஆம் தேதி லக்னோவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவர ஆலோசிக்கப்படும் என்று கூறப்பட்டது. இதனால் தமிழக அரசின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என மக்கள் ஆவலோடு எதிர்பார்த்திருந்தார்கள்.

“இதெல்லாம் சரியா படல” – முதல்வரிடம் பிடிஆர் மீது பிராது கொடுத்த அண்ணாமலை!

ஆனால் பிடிஆர் கூட்டத்திற்குச் செல்லாமல் ஏமாற்றமளித்தார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் விளக்கமளித்த அவர், கூட்டத்திற்கான அறிவிப்பு தனக்கு தாமதமாக வந்தததாகவும், நிறைய நிகழ்ச்சிகளில் தலைமையேற்பதாக உறுதியளித்து விட்டதால் செல்ல முடியாததாகவும் கூறினார். இதுதான் உண்மை செய்தி. ஆனால் இதனை திரித்துக் கூறுவதில் ஸ்பெஷலிஸ்ட்டான பாஜக ஆதரவாளர்கள், பிடிஆர் கொளுந்தியாளின் மகள் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு செல்வதால் ஜிஎஸ்டி கூட்டத்தில் கலந்துகொள்ள முடியவில்லை என சொன்னதாக வதந்தி பரப்பினர்.

“இதெல்லாம் சரியா படல” – முதல்வரிடம் பிடிஆர் மீது பிராது கொடுத்த அண்ணாமலை!

இதன் உண்மைத்தன்மையை அறியாமல் இன்னபிற அரசியல் கட்சி ஆதரவாளர்களும் பிடிஆரை சரமாரியாக திட்டினர். இதற்கெல்லாம் ட்விட்டரில் பதிலடி கொடுத்த பிடிஆர், மாட்டுச்சாண மூளை கொண்டவர்கள் நீங்கள் இப்படித்தான் வதந்திகளைப் பரப்புவீர்கள், நல்ல மனநல ஆலோசகரைப் பாருங்கள் என கிழித்தெடுத்தார். இலைகள் நின்றாலும் காற்று விடுவதாய் இல்லை என்பது போல தற்போது அண்ணாமலை பிடிஆரின் செயலுக்குக் கண்டனம் தெரிவித்து முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

“இதெல்லாம் சரியா படல” – முதல்வரிடம் பிடிஆர் மீது பிராது கொடுத்த அண்ணாமலை!

அதில், “மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் லக்னோவில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், தமிழகம் சார்பில் பேசப்பட வேண்டிய பிரச்சினைகள் அதிகம் இருந்தும், தமிழக நிதியமைச்சர் பங்கேறகவில்லை. இது மக்களுக்கு ஏமாற்றம் அளித்துள்ளது. கொரோனாவால் 20 மாதங்களுக்குப் பின்பு நேரடியாக நடைபெற்ற இக்கூட்டத்தில், பல்வேறு தரப்பினருக்குமான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இதில், தமிழகத்தின் பிரச்சினைகளை எடுத்துரைக்க எவரும் இல்லை என்பது, மக்களை மதிக்காத எதேச்சதிகாரமாகும்.

வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டியிருந்ததால் இக்கூட்டத்துக்கு செல்லவில்லை என்று நிதியமைச்சர் கூறியிருக்கிறார். இதிலிருந்து, திமுக அரசு எதற்கு முக்கியத்துவம் தருகிறது என்று தெளிவாகிறது. இக்கூட்டம் குறித்து செப்டம்பர் 2-ம் தேதியே அறிவிப்பு வெளியாகியும், போதிய அவகாசம் இல்லை என்கிறார் தமிழக நிதியமைச்சர். அதேபோல, லக்னோவுக்கு நேரடி விமானம் இல்லை என்றார். பின்னர் தந்த விளக்கத்தில், சிறிய ரக விமானங்களில் செல்ல மாட்டேன் என்கிறார்.

வெறும் மூன்று மணி நேரப் பயணத்தில் நேரடி விமானம் இருந்தும், தவறான தகவல்களை அவர் கூறியுள்ளார். பெட்ரோலியப் பொருட்களில் உள்ள வரிகளை ஒருங்கிணைத்து, ஜிஎஸ்டி பட்டியலில் இணைக்க வேண்டும் என்று எதிக்கட்சித் தலைவராக தாங்கள் கூறியது மக்களால் வரவேற்கப்பட்டது, ஆனால், ஆட்சிக்கு வந்த பின்னர், தங்கள் நிலைப்பாடு தலைகீழாக மாறிவிட்டது. தவறைச் சுட்டிக்காட்ட வேண்டிய எதிர்க்கட்சி கடமை காரணமாக, இக்கடிதத்தை எழுதியுள்ளேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.