“அண்ணாமலை வேட்பு மனு நிறுத்திவைப்பு” : அதிர்ச்சியில் பாஜக!!

 

“அண்ணாமலை வேட்பு மனு நிறுத்திவைப்பு” : அதிர்ச்சியில் பாஜக!!

வழக்குகள் தொடர்பான விபரங்கள் பூர்த்தி செய்யப்படாததால் பாஜக வேட்பாளர் அண்ணாமலை வேட்புமனு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்ற பணிகளை முனைப்புடன் செய்து வருகிறது தேர்தல் ஆணையம் . தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய கால் அவகாசம் நேற்றே முடிவுற்றது. நாளை மறுநாளுக்குள் வேட்புமனுவை திரும்ப பெறலாம் என்று அறிவித்துள்ள தேர்தல் ஆணையம் அன்று மாலையே இறுதி வேட்பாளர் பட்டியலை வெளியிடுகிறது. இந்த சூழலில் எடப்பாடியில் பழனிசாமி, போடியில் துணை முதல்வர் ஓபிஎஸ் மற்றும் தங்கத்தமிழ்செல்வன், கொளத்தூரில் ஸ்டாலின் ஆகியோரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டதுகோவில்பட்டியில் போட்டியிடும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வேட்பு மனு ஏற்கப்பட்டுள்ளது.

“அண்ணாமலை வேட்பு மனு நிறுத்திவைப்பு” : அதிர்ச்சியில் பாஜக!!

திருச்செங்கோட்டில் போட்டியிடும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன், கரூர் தொகுதியில் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர், திமுகவில் செந்தில் பாலாஜி, விராலிமலையில் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் ,பண்ருட்டியில் வேல்முருகன் , திருச்சி கிழக்கு தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வெல்லமண்டி நடராஜன் ,திமுக சார்பில் குறிஞ்சிப்பாடி தொகுதியில் போட்டியிடும் எம்ஆர்கே பன்னீர்செல்வம் ஆகியோரின் வேட்பு மனு ஏற்கப்பட்டுள்ளது.

“அண்ணாமலை வேட்பு மனு நிறுத்திவைப்பு” : அதிர்ச்சியில் பாஜக!!

இந்நிலையில் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலை வேட்பு மனு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.தன் மீதான 10ற்கும் மேற்பட்ட வழக்குகள் குறித்து வேட்புமனுவில் அண்ணாமலை சரியாக குறிப்பிட வில்லை என்ற எதிர்க்கட்சியினரின் புகாரைத் தொடர்ந்து அண்ணாமலை வேட்பு மனுவை தேர்தல் அதிகாரி நிறுத்தி வைத்துள்ளார்.