தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை இன்று பொறுப்பேற்பு!

 

தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை இன்று பொறுப்பேற்பு!

கரூர் மாவட்டத்தை சேர்ந்த அண்ணாமலை, கர்நாடக மாநிலத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றிவந்த நிலையில், கடந்த 2019 ஆம் ஆண்டு தனது பதவியை ராஜினாமா செய்தார்.பின்னர் அவர் தன்னை பாஜகவில் இணைத்து கொண்டார். அவருக்கு தமிழக பாஜகவின் துணைத்தலைவர் பதவி வழங்கப்பட்டது.இதையடுத்து பாஜக தொடர்பான நிகழ்ச்ச்சிகள் கூட்டங்கள் என கலந்து கொண்டு வந்த இவர் , கடந்த சட்டமன்ற தேர்தலில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை இன்று பொறுப்பேற்பு!

இந்த சூழலில் மத்திய அமைச்சராக எல்.முருகன் பதவியேற்ற நிலையில் புதிய தலைவராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார். ஒலிபரப்புத்துறை/கால்நடைத்துறை/மீன்வளத்துறை/ பால்வளத்துறை/ஆகிய நான்கு முக்கிய துறையில் மத்திய இணை அமைச்சர் பதவியை எல்.முருகன் ஏற்றுக்கொண்ட நிலையில் அண்ணாமலை பாஜக தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்த அடுத்த நொடியே ட்விட்டர் ட்ரெண்டிங்கில் அண்ணாமலை இந்தியளவில் முதல் இடம்பிடித்தார்.

தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை இன்று பொறுப்பேற்பு!

இந்நிலையில் தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்ட அண்ணாமலை இன்று சென்னை கமலாலயத்தில் தலைவராக பொறுப்பேற்று கொள்கிறார். எல்.முருகன் மத்திய இணையமைச்சர் ஆனதால் தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் பாஜக அலுவலகத்தில் அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது